Fancy number Charges Hike:வாகனங்களுக்கு பேன்சி எண் வாங்க இனி இருமடங்கு கட்டணம்!
வாகனங்களுக்கான பேன்சி எண்களின் கட்டணம் இருமடங்காக உயர்கிறது.
புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தனக்கு பேன்சி எண்கள் கிடைக்க வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். சமீப காலமாக வாகனங்களுக்கு பேன்சி எண் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், விஐபிகள் நியூமராலஜி காரணமாக இந்த பேன்சி எண்களை வாங்குகின்றனர்.
இந்த எண்ணெய் வாங்குவதற்காக 2000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்துகின்றனர். 0001 முதல் 9999 வரையிலான 100 எண்களைத் தமிழக அரசு சிறப்பு எண்களாக ஒதுக்கி உள்ளது. பேன்சி எண்களை ஆர்டிஓக்கள் மூலம் பெற முடியாது ஆனால் சிறப்பு கட்டணம் செலுத்திப் பெற முடியும்.
இந்நிலையில் தற்போது டிஎன் மோட்டார் வாகன விதிகள் 1989ன் வரைவு திருத்தத்தின் சட்டப்படி பேன்சியின் கட்டணத்தை 2000 ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாய் வரை உயர்த்த உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
இதன் காரணமாக பேன்சி எண்களுக்கான கட்டணம் விரைவில் இரு மடங்காக உயரும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் இதற்கான அரசாணைகள் விரைவில் வெளியாக உள்ளது.
அந்த வகையில் 5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கு ரூபாய் 60 ஆயிரத்திலிருந்து 1.2 லட்சம் கட்டணமாகவும், ஒன்பது முதல் பத்து வரை எங்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை கட்டணமாகவும் உயர்கிறது. மேலும் 11 முதல் 12 வரையிலான தொடர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை கட்டணம் உயர்கிறது.