Chanda Kochhar: சந்தா கோச்சார் கைது சட்டவிரோதமானது: மும்பை உயர்நீதிமன்றம்
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சிபிஐ கடந்த மாதம் கைது செய்தது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சிபிஐ கடந்த மாதம் கைது செய்தது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஜனவரி 15-ம் தேதி கோச்சார் மகனின் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தகைய உத்தரவு வந்துள்ளது. இது அவருக்கு சற்றே நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.
சந்தா கோச்சார் டிசம்பர் 23 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார். (கோப்பு)
சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக இருந்தபோது, வீடியோகான் குழுமத்திற்கு வழங்கிய ரூ. 3,000 கோடி கடனில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், டிசம்பர் 23 அன்று, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கடந்த மாதம் கைது செய்ததது.
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சந்தா கோச்சாரும், அவரது கணவர் தீபக் கோச்சாரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த கைது நடவடிக்கை மகனின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கேள்வியை எழுப்புகிறது என்றும் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கோச்சார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்று கோச்சார் தரப்பில் வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.
இதையடுத்து, நீதிபதி இந்தக் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என கூறி விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரீம் எனர்ஜி, வீடியோகான் இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியோரால் நிர்வகிக்கப்படும் நியூபவர் ரினியூவபிள்ஸ் (என்ஆர்எல்) நிறுவனங்களுடன் சந்தா கோச்சார், தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக சிபிஐ ஊழல் மற்றும் சதி வழக்குகளை பதிவு செய்துள்ளது.
வங்கி ஒழுங்குமுறை சட்டம், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கியின் கடன் கொள்கையை மீறி வீடியோகான் குழுமத்தின் நிறுவனங்களுக்கு ரூ. 3,250 கோடி கடனை வழங்க ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார் அனுமதித்திருக்கிறார் என்று சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (SEPL) மூலம் தீபக் கோச்சாரின் நுபவர் ரினியூவபில்ஸ் நிறுவனத்தில் வேணுகோபால் தூத் ரூ.64 கோடி முதலீடு செய்தார்.