Jammu Bus Accident: கத்ரா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலி
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Jammu Bus Accident: கத்ரா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலி

Jammu Bus Accident: கத்ரா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலி

Pandeeswari Gurusamy HT Tamil
May 30, 2023 08:50 AM IST

அமிர்தசரஸில் இருந்து கத்ராவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது

ஜம்முவில் பேருந்து பாலத்தில் இருந்து சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
ஜம்முவில் பேருந்து பாலத்தில் இருந்து சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

மேலும் 12 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ஜஜ்ஜார் கோட்லி பகுதிக்கு அருகில், ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “எட்டு முதல் 10 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த 4 பேர் ஜம்முவின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர், மேலும் 8 பேர் ஜாஜ்ஜார் கோட்லியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்றார்.

ஏற்கனவே கடந்த 21ம் தேதி கத்ராவின் மூரி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 23 பேர் காயமடைந்ததனர். இந்நிலையில் இந்த மாதத்தில் இப்பகுதியில் நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.