Bus Accident : குளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து - 3 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி; 35 பேர் காயம்! பங்களாதேஷில் சோகம்!
Bus Accident : பங்களாதேஷின் ஜலகதி சதர் உபாசிலாவின் சத்திரகாண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷின் ஜலகதி சதர் உபாசிலாவின் சத்திரகாண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பரிஷால் செல்லும் பேருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பிரோஜ்பூரின் பண்டாரியாவில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, 10 மணியளவில் பரிஷால்-குல்னா நெடுஞ்சாலையில் சத்ரகாண்டா என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் பேருந்து தள்ளாடிய நிலையில் தான் வந்தது. அங்குள்ள குளத்தின் அருகே வந்தபோது பேருந்து தனது கட்டுப்பாட்டை இழுந்தது. டிரைவர் எவ்வளவு முயன்றபோதும், பேருந்து சாலையோர குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
டிரைவரின் கவனக்குறைவுதான் பேருந்து விபத்துக்கு காரணம் என்று பஸ்சில் பயணம் செய்து உயிர் பிழைத்த பயணிகள் தெரிவித்தனர். பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும், கூட்ட நெரிசலால் அனைத்து பயணிகளும் பேருந்திற்குள் சிக்கிக்கொண்டனர். அதிக பாரம் ஏற்றப்பட்டதால், பேருந்து பாரம் தாங்கமுடியாமல் கவிழ்ந்து உடனடியாக நீரில் மூழ்கியதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், எஞ்சிய காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், 35க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகவும் அரிஷால் பிரதேச ஆணையர் எம்டி ஷவ்கத் அலி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜாபூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
டாபிக்ஸ்