Telangana: பிஆர்எஸ் எம்எல்ஏ நந்திதா சாலை விபத்தில் உயிரிழப்பு! 10 நாள்களுக்கு முன்னரே விபத்தில் சிக்கி தப்பித்த எம்எல்ஏ
எஸ்யூவிியின் ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேக நெடுஞ்சாலையின் இடது பக்கத்தில் உள்ள உலோகத் தடுப்பில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம், ஹைதராபாத் நகர் பட்டான்சேரு அருகே வெளிப்புற வட்ட சாலையில் பாரதிய ராஷ்ட்ரா சமீதி எம்எல்ஏவும், வழக்கறிஞருமான லஸ்யா நந்திதா (37) பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.
நந்திதா சென்ற மாருதி எக்எல்6 எஸ்யூவி காரை ஓட்டி கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இடதுபுறம் இருந்த இரும்பி பேரியரில் மோதியுள்ளார். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் எம்எல்ஏ நந்திதா உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த கார் டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மறைந்த பிஆர்எஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.சாயண்ணா மகளான நந்திதா, கடந்த நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் செகந்திராபாத் கண்டோமென்ட் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்த சாயண்ணா, கடந்த ஆண்டு பிப்ரவரியில் உடல் நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பை தொடர்ந்து, சாயண்ணா மகளான நந்திதாவுக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற பிஆர்சி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பங்கேற்ற பின் வீடு திரும்பியபோது மார்ரிகுடா பகுதியில் நடந்த விபத்தில் சிக்கிய நந்திதா, காயங்களுடன் தப்பினார்.
குடித்து விட்டு காரில் வந்த நபர், நந்திதா கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
யார் இந்த லஸ்யா நந்திதா?
1986ஆம் ஆண்டு பிறந்த நந்திதா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஹைதராபாத் மாநகராட்சில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இவரது தந்தை சாயண்ணா இறப்புக்கு பின்னர் அவர் போட்டியிட்ட செகந்திராபாத் கண்டோமென்ட் தொகுதியில் போட்டியிட நந்திதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
பாஜக வேட்பாளர் கணேஷ் என்பவரை 17,169 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்ற பெற்றார் நந்திதா.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்