Momo Eating Challenge : விளையாட்டு விபரீதமானது.. மோமோஸ் சாப்பிடுவதில் போட்டி.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Momo Eating Challenge : விளையாட்டு விபரீதமானது.. மோமோஸ் சாப்பிடுவதில் போட்டி.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

Momo Eating Challenge : விளையாட்டு விபரீதமானது.. மோமோஸ் சாப்பிடுவதில் போட்டி.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

Divya Sekar HT Tamil
Jul 16, 2023 09:08 AM IST

பீகாரில் நண்பர்களுடனான பந்தயத்தில் ஒரே நேரத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 பந்தயத்தில் ஒரே நேரத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட்ட இளைஞர் பலி
பந்தயத்தில் ஒரே நேரத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட்ட இளைஞர் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விபின் குமாரின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகன் விபினுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை விஷ்னு மஞ்சி தெரிவித்துள்ளார். விபின் குமாரின் சடலம் கிடந்த இடம் தங்களது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கிடையாது என்றும் தாவே போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு காவல் அலட்சியமாக பதிலளித்ததாக விஷ்னு தெரிவித்தார்.

தனது மகனின் நண்பர்கள் அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் வேண்டுமென்றே மோமோ சாப்பிடும் சவாலை முன்மொழிந்ததாகவும், அந்த செயலில் தனது மகனுக்கு விஷம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதேநேரம், இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், நண்பர்களுடனான பந்தயத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட்டதால் விபின் குமார் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமாக மோமோஸ்களை சாப்பிட்ட நிலையில், விபின் குமாரின் உடல் நலம் மோசமானதாகவும், சர்தார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த சிகிச்சை பலனின்றி விபின் குமார் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இருப்பினர் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீட்டுக்கு பின்னரே வியின் குமார் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.