தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bengaluru:அம்போன்னு வெள்ளத்தில் போன 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள்

Bengaluru:அம்போன்னு வெள்ளத்தில் போன 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள்

Pandeeswari Gurusamy HT Tamil
May 27, 2023 03:04 PM IST

தங்கம் விலை சவரன் ரூ.45 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில் 2.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நகைகள்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நகைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் பெங்களூர் நகர் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெங்களூரு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. .

இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் தாழ்வான இடத்தில் அமைந்து இருந்த நகைக் கடைக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதில் நகை கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளத்தின் வேகத்தில் நகைகள் அடித்துச் செல்லப்பட்ட போது, கடையின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களால் எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நகைகள் அடித்து செல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இச்சம்பவம் நகைக்கடை அமைந்திருந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தங்கம் விலை 45 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில் 2.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பெய்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் பெங்களூர் நகர் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெங்களூரு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. .

இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் தாழ்வான இடத்தில் அமைந்து இருந்த நகைக் கடைக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதில் நகை கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளத்தின் வேகத்தில் நகைகள் அடித்துச் செல்லப்பட்ட போது, கடையின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களால் எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நகைகள் அடித்து செல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இச்சம்பவம் நகைக்கடை அமைந்திருந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தங்கம் விலை சவரன் ரூ.45 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படும் நிலையில் 2.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்