Ather Energy : தமிழகத்தில் 150 பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை உருவாக்க திட்டம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ather Energy : தமிழகத்தில் 150 பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை உருவாக்க திட்டம்!

Ather Energy : தமிழகத்தில் 150 பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை உருவாக்க திட்டம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 21, 2022 11:44 AM IST

நடப்பு நிதியாண்டுக்குள் தமிழகத்தில் 150 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை உருவாக்க ஏதர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏதர் எனர்ஜி
ஏதர் எனர்ஜி

அந்த வகையில் வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் 150 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஏதர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் தமிழகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காடு வளர்ச்சியை ஏதர் எனர்ஜி நிறுவனம் இந்த காலாண்டில் கண்டுள்ளது. இதுகுறித்து ஏதர் எனர்ஜி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்," வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சில்லறை விற்பனை செய்யப்படும் 15 கடைகளுக்கு விரிவுபடுத்தவும். புதிதாக 180 பாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்தர நம்பகமான எலக்ட்ரிக் வாகனங்களில் நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏதர் 450 எக்ஸ் க்கு தேவையான விஷயங்களை பூர்த்தி செய்ய நாங்கள் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். தமிழகத்தில் சில அற்புதமான விஷயங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.