Eelection Result 2024: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. அருணாச்சலில் பாஜக முன்னிலை..சிக்கிம் நிலவரம் என்ன?
Eelection Result 2024: மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை பணி இன்று (ஜூன் 02) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜூன் 2 ஆம் தேதி அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 02) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
10 பேர் ஏற்கனவே வெற்றி
அருணாச்சலில் மொத்தமுள்ள 60 இடங்களில் முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், வடகிழக்கு மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி மற்றொரு வெற்றியை எதிர்நோக்கி காத்துள்ளது.
அருணாச்சல் முன்னணி நிலவரம்
காலை 7 மணி நிலவரப்படி அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 21 இடங்களில் முன்னணி வகிக்கிறது. என்பிபி 4 இடங்களிலும், காங்கிரஸ் - 1, இதர கட்சிகள் 5 இடங்கள் என முன்னணி நிலவரங்கள் வெளியாகி உள்ளன.
சிக்கிம் முன்னணி நிலவரம்
சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1
பாஜக - 1
காங்கிரஸ் - 0
மற்றவை - 0
கருத்துகணிப்பு முடிவுகள்
இந்தியா டுடே - மை ஆக்சிஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி 41-55 இடங்களையும், என்பிபி 2 முதல் 6 இடங்களையும், காங்கிரஸ் ஒன்று முதல் நான்கு இடங்களையும், மற்றவர்கள் இரண்டு முதல் ஆறு இடங்களையும் வெல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
சிக்கிம் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகளும் இன்று வெளியாகின்றன. வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. சிக்கிமில் ஆளும் கட்சியான எஸ்.கே.எம் கட்சி எளிதாக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன.
சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் 543 மக்களவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
2019 தேர்தல் முடிவுகள்
2019 சட்டமன்றத் தேர்தலில், அருணாச்சல பிரதேசத்தில் பாஜக 41 இடங்களை வெற்றி பெற்றிருந்தது. ஐக்கிய ஜனதா தளம் 7 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், அருணாச்சல மக்கள் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றி இருந்தன. சட்டசபை தேர்தலிலும் 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர், நபம் துகி தவிர மற்ற அனைவரும் பா.ஜ.,வில் இணைந்தனர்.
அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில மக்களவை தொகுதிகளில் பதிவான முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்