Christmas 2023: உலக சாதனை..2 டன் வெங்காயத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ் - வைரல் வீடியோ
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Christmas 2023: உலக சாதனை..2 டன் வெங்காயத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ் - வைரல் வீடியோ

Christmas 2023: உலக சாதனை..2 டன் வெங்காயத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ் - வைரல் வீடியோ

Karthikeyan S HT Tamil
Dec 25, 2023 09:52 AM IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெங்காயங்களை வைத்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸின் மணற்சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூரி கடற்கரையில் வெங்காயங்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்ட சாண்டா கிளாஸ்.
பூரி கடற்கரையில் வெங்காயங்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்ட சாண்டா கிளாஸ்.

இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாத, தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் பிரம்மாண்ட சாண்டா கிளாஸ் மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வெங்காயங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளார். இவரின் இந்த சிற்பம், இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மாபெரும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தை உருவாக்க சுமார் 2 டன் வெங்காயங்கள் பயன்படுத்தப்பட்டதாக சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பூரி கடற்கரையில் வித்தியாசமான முறையில் மணற்சிற்பங்களை உருவாக்க முயற்சி செய்வோம்.அந்தவகையில் இந்த ஆண்டு சுமார் 2 டன் வெங்காயங்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய சாண்டா கிளாஸ் மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளோம். இந்த சிற்பம் 100 அடி நீளமும், 20 அடி உயரமும், 40 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த சிற்பங்களை முடிக்க 8 மணி நேரம் ஆனது. மரங்களை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஒரு செடி, பசுமை பூமி' என்ற பெயரில் வெங்காயத்தைப் பயன்படுத்தி இந்த மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளோம்.” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், "காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் அறிவோம், எனவே இது நம் அனைவருக்கும் ஒரு செய்தி. மேலும் மரங்களை நடுவது காலத்தின் தேவை என்றும் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெங்காயங்களை வைத்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸின் மணற்சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.