Apple iPhone: இந்த சான்ஸ மட்டும் மிஸ் பண்ணிடாதிங்க! ஐபோன்களுக்கு சலுகையை அள்ளி தந்த பிளப் கார்ட்
Check out Flipkart's offers on Apple iPhone 15 and Apple iPhone 14 here.
ஆப்பிள் ஸ்மார்ட்போனுக்கு என தனியாக ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது என கூறலாம். மிகவும் செல்வாக்கு பெற்ற ஸ்மார்ட்போனாக இருந்து வரும் ஐபோன் வைத்திருப்பதே ஒரு கெத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட், குடியரசு தின விழா விற்பனையை தொடங்கியுள்ளது. ஜனவரி 13 முதல் 19ஆம் தேதி வரை இந்த விற்பனையானது நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு பொருள்களுக்கு விலைகுறைப்பு, சலுகைகள் என அள்ள வழங்கியுள்ளது. அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் பிரியர்களை குளிர்விக்கும் விதமாக ஐபோன் 14, ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.
அதன்படி ஆப்பிள் ஐபோன் விலையானது இந்தியாவில் ரூ. 78, 900 என இருந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போனுக்கு 17 சதவீதம் வரை பிளிப்கார்டில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போன் விலை தற்போது ரூ. 65, 999 என குறைந்துள்ளது. ரூ. 13, 901 சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக வங்கி சலுகையை பயன்படுத்தி இன்னும் விலை குறைக்கப்பட்டு வாங்கலாம்
அதேபோல் எக்சேஞ்ச் சலுகை மூலம் ரூ. 54, 990 கொடுத்து ஆப்பிள் ஐபோன் 15ஐ வாங்கிவிடலாம்.
கடந்த 2022இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 போன்கள் விலை 17 சதவீதம் சலுகை போக புதிய விலையாக ரூ. 57, 999 என குறைக்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு ரூ. 11, 901 வரை குறைக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் சலுகை மூலம் ரூ. 54, 900க்கு ஐபோன் 14ஐ வாங்கலாம். கூடுதலாக வங்க சலுகைகளை பயன்படுத்தினால் விிலை மேலும் குறையவும் வாய்ப்பு உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்