ஆந்திரப்பிரதேசம்: சாலைவிபத்தில் 3 குழந்தைககள் உள்பட 5 பேர் பலி-andhra pradesh 5 people including 3 children die in road accident - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஆந்திரப்பிரதேசம்: சாலைவிபத்தில் 3 குழந்தைககள் உள்பட 5 பேர் பலி

ஆந்திரப்பிரதேசம்: சாலைவிபத்தில் 3 குழந்தைககள் உள்பட 5 பேர் பலி

I Jayachandran HT Tamil
Jun 13, 2022 01:01 PM IST

ஆந்திரப்பிரதேசம் அல்லுரி சித்தராமா ராஜு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

பேருந்து விபத்து
பேருந்து விபத்து

திங்கள்கிழமை அதிகாலையில் சித்தூரில் உள்ள எடுகுரல்லபள்ளி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழந்துள்ளது.

தகவல் அறிந்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.

விசாரணையில் அந்தப் பேருந்தில் விபத்து நிகழந்த சமயத்தில் 40 பயணிகள் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பத்ராசலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் தானேஷ்வர் தல்பதி24, ஜூட்டு ஹரிஜன் 5, சுனேனா 2 ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.