Alexa Saves Family: தீ விபத்திலிருந்து 6 பேர் குடும்பத்தை காப்பாற்றிய அலெக்சா
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Alexa Saves Family: தீ விபத்திலிருந்து 6 பேர் குடும்பத்தை காப்பாற்றிய அலெக்சா

Alexa Saves Family: தீ விபத்திலிருந்து 6 பேர் குடும்பத்தை காப்பாற்றிய அலெக்சா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 23, 2022 11:44 AM IST

தனிமை விரட்டும் தோழன், தோழியாக இருந்து வரும் அலெக்சா சாதனம் ஒரு குடும்பத்தை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அலெக்சாவின் எச்சரிக்கையால் பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளனர்.

<p>தீ விபத்திலிருந்து குடும்பத்தினரை காப்பற்றிய அலெக்சா</p>
<p>தீ விபத்திலிருந்து குடும்பத்தினரை காப்பற்றிய அலெக்சா</p>

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நமக்கான உதவியாளராகவும், நண்பராகவும், தனிமை போக்கும் பணியையும் மேற்கொள்ளும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அலாரம் வைத்து உங்களை எழுப்பவது முதல், செய்திகள் வாசிப்பது விரும்பிய பாடல்கள் ப்ளே செய்வது, கதை சொல்வது என உங்களுடனே எப்போதும் இருக்கும் தோழன், தோழி போன்ற அமேசான் நிறுவனத்தின் அலெக்சா சாதனம் உள்ளது.

நமது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மிகப் பெரிய செயலையும் அலெக்சா செய்துள்ளது. அமெரிக்காவில் மேரிலாந்து மாகணத்தில் அமைந்திருக்கும் மாண்ட்கோமெரி பகுதியில் சரியான நேரத்தில் அலெக்சா அளித்த எச்சரிக்கையால் நான்கு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீ விபத்திலிருந்து தப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாண்ட்கோமெரி மாவட்ட தீ மற்றும் மீட்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நள்ளிரவு 2 மணி பொழுதில், வீட்டில் புகை வந்ததை அடுத்து அமேசானின் விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் உடனடியாக அந்த குடும்பத்தினருக்கும் எச்சரிக்கை அளித்துள்ளது. இதன் பிறகு உடனடியாக கண்விழித்து பார்த்து அவர்களுக்கு கடுமையான புகை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக வெளியேறியுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அலெக்சாவில் ஸ்மோக்கிங் அலாரம் ஆக்டிவேட் செய்யப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் வேலை செய்து 6 உயிர்களை காப்பாற்றியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மாண்ட்கோமெரி மாவட்ட தீ மற்றும் மீட்புத்துறையின் தலைமை செய்தித் தொடர்பாளர் பீட் பிரிங்கர் கூறும்போது, " வீட்டில் இணைக்கப்பட்ட கேரேஜ்ஜில் புகை வருவதை கண்டு அவர்கள் அதன் கதவை திறந்து பார்க்க முயற்சித்துள்ளனர். ஆனால் வெப்பம் மற்றும் தீவிர புகை காரணமாக திறக்க முடியவில்லை. இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அந்த வீட்டிலும் ஸ்மோக்கிங் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது.

அங்கு இரண்டு மின்சார சார்ஜர்கள் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று எலெக்ட்ரிக் பைக்கின் சார்ஜராகவும், மற்றொன்று எலெக்ட்ரிக் லான்மோவர் பேட்டரியாகவும் உள்ளது.

எரியக்கூடிய பொருள்கள் மிக அருகில் இருந்ததால் வெப்பம் காரணமாக தீ பற்றி எரிந்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Whats_app_banner

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.