இன்று தேசிய பறவைகள் தினம் .. எதற்காக கொண்டாடுகிறோம் ... முக்கியத்துவம் என்ன? வரலாறு என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இன்று தேசிய பறவைகள் தினம் .. எதற்காக கொண்டாடுகிறோம் ... முக்கியத்துவம் என்ன? வரலாறு என்ன?

இன்று தேசிய பறவைகள் தினம் .. எதற்காக கொண்டாடுகிறோம் ... முக்கியத்துவம் என்ன? வரலாறு என்ன?

Karthikeyan S HT Tamil
Jan 05, 2024 06:20 AM IST

National Birds Day 2024: தேசிய பறவைகள் தினம் வரலாறு முதல் கொண்டாட்டங்கள் வரை.. இந்த சிறப்பு நாளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த கட்டுரையில் காணலாம்.

தேசிய பறவைகள் தினம் 2024
தேசிய பறவைகள் தினம் 2024

இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை பறவை இனங்கள் உள்ளன. தமிழக வனப்பகுதிகளில் கழுகு, கூழைக்கிடா, பருந்து வண்ண நாரை, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, கொக்கு, குயில், அாிவாள் மூக்கன், பாம்புதாரா, நீர்காகம், மயில், ஆந்தை, புறா உள்ளிட்ட பலவகைப்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. இருப்பினும், நீர்நிலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, மரங்கள் அழிக்கப்படுதல், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் அாிய வகை பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய பறவைகள் தின வரலாறு

தேசிய பறவைகள் தினம் முதன்முதலில் அமெரிக்காவில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5-ஆம் தேதி இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம், அமெரிக்காவில் வருடாந்திர "கிறிஸ்துமஸ் பறவை எண்ணிக்கை" அதே நாளில் நடைபெறுகிறது. இந்நாளில் மக்கள் அனைவரும் இணைந்து அமெரிக்காவில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை, ஆரோக்கியம் பற்றிய விவரங்களை சேகாிக்கின்றனா். இந்த வருடாந்திர கணக்கெடுப்பு அமெரிக்காவில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. அன்றைய தினம் அமெரிக்காவில் தேசிய விடுமுறை தினம் ஆகும்.

தேசிய பறவைகள் தினத்தின் முக்கியத்துவம்

பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாகவும், அனைத்து வகையான பறவைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளதால் தேசிய பறவைகள் தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. பறவைகளின் உயிர்வாழ்வும் நல்வாழ்வும், இயற்கையையும் அவற்றின் வாழ்விடத்தையும் மனிதர்களாகிய நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதைப் பொறுத்தது. பறவைகளைப் பாதுகாப்பது, வளா்ப்பது, வளா்ப்போருக்கு உாிய ஆலோசனைகள் வழங்குதல் போன்றவை இந்நாளின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

பறவை இல்லையென்றால் மரம் இல்லை..மரம் இல்லையெனில் மழை கிடையாது..மழை இல்லை என்றால் விவசாயம் இல்லை..விவசாயம் அழிந்தால் மனித குலம் படும்பாடு பெரும்பாடாகிவிடும். ஆகவே பறவைகளை பாதுகாப்போம். பறவைகளின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒவ்வொரு கடமையாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.