Alexander Fleming : முதல் கிருமிக்கொல்லி பென்சிலினை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃபிளமிங் நினைவு தினம் இன்று!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Alexander Fleming : முதல் கிருமிக்கொல்லி பென்சிலினை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃபிளமிங் நினைவு தினம் இன்று!

Alexander Fleming : முதல் கிருமிக்கொல்லி பென்சிலினை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃபிளமிங் நினைவு தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Mar 11, 2024 05:30 AM IST

அது ஒரு கிருமிக்கொல்லியாகவும், அதை ஊசிமூலம் செலுக்ககூடிய ஆன்டிபயோடிக்காகவும் அதை பிரித்தெடுத்து பயன்படுத்தலாம் என்றும், அதற்கு பென்சிலின் என்ற பெயரும் இட்டார்.

Alexander Fleming : முதல் கிருமிக்கொல்லி பென்சிலினை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃபிளமிங் நினைவு தினம் இன்று!
Alexander Fleming : முதல் கிருமிக்கொல்லி பென்சிலினை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃபிளமிங் நினைவு தினம் இன்று!

1928ம் ஆண்டு இவர் கண்டுபிடித்த பென்சிலின் ஒரு ஆன்டிபயோடிக் புரட்சியை ஏற்படுத்தியது. இந்த சாதனைக்காக 1945ம் ஆண்டு ஃபிளமிங் அங்கீகரிக்கப்பட்டார். மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இவருடன் சேர்ந்து ஆஸ்திரேலிய நோயியல் நிபுணர் ஹோவார்ட் வால்டர் ஃப்ளோரே மற்றும் ஜெர்மனியில் பிறந்த பிரிட்டிஷ் உயிர்வேதியலாளர் எர்னஸ்ட் போரிஸ் செயின் ஆகியோரும் பரிசு பெற்றனர். அவர்களுக்கு பென்சிலனை சுத்தப்படுத்தியதற்காக கிடைத்தது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த விவசாயியின் 8 குழந்தைகளில் 7வது பிறந்தவர். இவரது தாய் இவரது தந்தைக்கு இரண்டாவது மனைவி, அவரின் 4 குழந்தைகளில் 3வதாக பிறந்தவர். இவரது சிறுவயதிலேயே இவரின் உற்றுநோக்கும் திறனை ஸ்காட்லாந்து வளர்த்தெடுத்தது. லவுடவுன் மூரில் இவர் பள்ளி படிப்பை துவங்கினார். பின்னர் அங்கிருந்து டார்வெல் சென்று கல்வி கற்றார். பாலிடெக்னிக் படிப்பை லண்டனில் தனது அண்ணனுடன் தங்கி கற்றார்.

லண்டன் ஷிப்பிங் கிளர்காக பணியாற்றிய பின்னர், ஃபிளமிங் தனது மருத்துவ கல்வியை செயின்ட் மேரிஸ் மருத்துவமனை மெடிக்கல் பள்ளியில் கற்றார். அங்கு 1908ம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தின் டாப் மருத்துவ மாணவராகி தங்கப்பதக்கம் பெற்றார்.

அவர் அறுவைசிகிச்சை நிபுணர் ஆக ஆசைப்பட்டார். ஆனால் அவர் செயின்ட் மேரிஸ் மருத்துவமனையில் ஏற்ற தற்காலிக ஆய்வக பதவி அவரை பாக்டீரியலாஜிஸ்ட் என்ற புதிய துறையில் அவரது எதிர்காலம் அமைய அடித்தளம் அமைத்தது.

1909 முதல் 1914ம் ஆண்டு, ஒரு மருத்துவராக திறம்பட செயல்பட்டார். 1915ம் ஆண்டு அவர் சாரா மரியான் மெக்எல்ராய் என்ற ஐரிஷ் செவிலியரை திருமணம் செய்து கொண்டார். 1924ம் ஆண்டு ஃபிளமிங்குக்கு மகன் ராபர்ட் பிறந்தார். அவரும் தனது தந்தையைப்போல் மருத்துவரானார். 1921ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஃபிளமிங், லைசோசைம் என்ற எண்சைமை கண்டுபிடித்தார்.

அது உடலில் உள்ள கண்ணீர், எச்சில் போன்ற திரவங்களில் கலந்திருந்தது. அதற்கு காயங்களை ஆற்றும் குணம் சிறிது இருந்தது. இது அவரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஆகும். இவருக்கு சளி இருந்தபோது, நடந்துகொண்டிருந்த பாக்டீரியா குறித்த ஆய்வில், இவரது மூக்கில் இருந்த சளி எதிர்பாராதவிதமாக சிந்திவிட்டது. இதையடுத்து, அவர் சளியில் பாக்டீரியாவை கலந்து வைத்தார்.

சில வாரங்கள் கழித்து பார்த்தபோது அதில் இருந்த பாக்டீரியாக்கள் கரைந்திருந்தது. லைசோசைம் குறித்த ஃபிளமிங்கின் ஆய்வு, ஒரு அறிவியலாளராக சிறந்த பணியாக கருதப்படுகிறது. இதன் மூலம் உடல் எவ்வாறு தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. துரதிஷ்டவசமாக நோய்கிருமிகளை பரப்பும் பாக்டீரியாக்களை எதிர்த்து லைசோம்களால் போராட முடியவில்லை.

பாக்டீரியாலாஜி பேராசிரியர் ஆனவுடன், 1928ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி, இவர் ஸ்டஃபிலோகோகஸ் அரியஸ் என்ற பாக்டீரியாவை வைத்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, அதன் மீது பூஞ்ஜை படர்ந்தது. அது பிற்காலத்தில் பென்சிலியம் நொட்டாட்டம் என்று அழைக்கப்பட்டது.

அது அந்த பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தியிருந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஃபிளமிங், லைசோசெம்மைவிட சிறந்த எண்சைமை கண்டுபிடித்துவிட்டதாக எண்ணினார். அது எண்சைம் கிடையாது. அது ஒரு ஆன்டிபயோடிக். முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயோடிக். மருத்துவ ரீதியாக அது உதவக்கூடும் என்று அவர் கூறினார்.

அது ஒரு கிருமிக்கொல்லியாகவும், அதை ஊசிமூலம் செலுக்ககூடிய ஆன்டிபயோடிக்காகவும் அதை பிரித்தெடுத்து பயன்படுத்தலாம் என்றும், அதற்கு பென்சிலின் என்ற பெயரும் இட்டார்.

அலெக்ஸாண்டர் ஃபிளமிங்கின் நினைவு நாளில் அவர் குறித்த சில தகவல்களை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குக ள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.