Akash Anand: மாயாவதியின் அரசியல் வாரிசு ஆகாஷ் ஆனந்த் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
பகுஜன் சமாஜ்வாதி கட்சி (பிஎஸபி) தலைவர் மாயாவதியின் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
பகுஜன் சமாஜ்வாடி கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி தனது சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை தனது வாரிசாக அறிவித்தார். "ஆகாஷ் (ஆனந்த்) மாயாவதியால் ' உத்தரதிகாரி (வாரிசு)' என்று அறிவிக்கப்பட்டுள்ளார்," என பிஎஸ்பியின் ஷாஜஹான்பூர் மாவட்ட பிரிவு தலைவர் உதய்வீர் சிங் கூறினார்.
லக்னோவில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாயாவதி தலைமையில் கட்சித் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது.
உத்தரபிரதேசம் தவிரநாடு முழுவதும் பிஎஸ்பி அமைப்பை வலுப்படுத்தும் பொறுப்பு ஆகாஷ் ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று உதய்வீர் சிங் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் அத்தகைய முடிவு எதுவும் குறிப்பிடப்படவில்லை. உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை மாயாவதி தொடர்ந்து கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் ஆனந்த் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே:
1. ஆகாஷ் ஆனந்த், 28, மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமாரின் மகன். X இல் தனது அதிகாரப்பூர்வ கணக்கில், ஆகாஷ் தன்னை "பாபா சாஹேப்பின் இளம் ஆதரவாளர்" என்று விவரிக்கிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். சமாஜ்வாதி கட்சியுடனான (SP) கூட்டணியை முறித்துக் கொண்ட பின்னர், மாயாவதி கட்சி அமைப்பை மறுசீரமைத்தபோது , 2019 இல் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆகாஷ் நியமிக்கப்பட்டார்.
2. ஆகாஷ் தனது 22வது வயதில் 2017ல் அரசியலில் நுழைந்தார் என என்டிடிவி தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து எம்பிஏ பட்டதாரி ஆகாஷை கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மாயாவதி அறிமுகப்படுத்தினார். அவர் கட்சி விவகாரங்களிலும் ஈடுபடுவார் என்று அவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.
3. 2019ல் ஆகாஷ் ஆனந்த் கட்சியில் நுழைவதாக மாயாவதி அறிவித்தார். அப்போது அவர், “நான் ஆனந்தை துணைத் தலைவராக நியமித்தேன், ஆனால் உறவுமுறை காரணமாக அவர் பதவியை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தார். துரதிர்ஷ்டவசமாக, எனது பிறந்தநாளில் ஆகாஷைப் பார்த்த பிறகு, சில சேனல்கள் அவரை இழுத்து, கட்சியின் எதிர்கால முகமாக முன்வைத்தன” என்றார்.
4. 2019 லோக்சபா தேர்தலில், பிஎஸ்பி தலைவரின் தேர்தல் பிரச்சார உத்தியை ஆகாஷ் ஆனந்த் நிர்வகித்தார். அவர் 2019 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் தனது முதல் பேரணியில் உரையாற்றினார். 2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், பிரச்சாரத்தின் போது கட்சியின் சமூக ஊடகங்களை கையாண்டார்.
5. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆகாஷ் ஆனந்த் 14-நாள் 'சர்வஜன் ஹிதாய், சர்வஜன் சுகாய்' சங்கல்ப் யாத்திரையைத் தொடங்கினார் . இது ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கியமான மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிஎஸ்பியின் வியூகத்தை மாற்றியமைப்பதாகக் கூறப்படுகிறது.
டாபிக்ஸ்