Airtel minimum recharge: ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்வு!
குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியிருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதுதில்லி: இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், ஹரியாணா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவில் இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிகிறது.
இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. அதற்கான கட்டணம் டெலிகாம் நிறுவனத்தை பொறுத்து மாறுபடும். இந்தச் சூழலில் ஏர்டெல் அந்த கட்டணத்தில் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது.
இப்போது வரை ஹரியாணா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணமாக ரூ.99 உள்ளது. இதில் ரூ.99 டாக்டைம் நொடிக்கு ரூ.2.5 பைசா கட்டணம் மற்றும் 200 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்தக் கட்டண்ததைத்தான் ஏர்டெல் இப்போது உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.