Air pollution: காற்று மாசுபாட்டால் கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்.. இந்தியர்கள் எவ்வளவு சதவீதம் அதிர்ச்சி அறிக்கை!
Air pollution: உலக அளவில் 2021-ல் 8.1 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர். அதாவது இறந்தவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர். - அதிர்ச்சி அறிக்கை!

Air pollution: இந்தியாவில் 5 வயதிற்கு கீழான குழந்தைகளில் 464 பேர் நாள் ஒன்றுக்கு காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள Health Effects Institute, சமீபத்தில் வெளியிட்ட State of Global Air(SoGA) அறிக்கையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 5 வயதிற்கு கீழான 464 குழந்தைகள், காற்று மாசுபாட்டால் முன்கூட்டியே இறப்பதாக தகவல் வெளிவந்து, அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
காற்று மாசுபாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்பு
இந்தியாவில் 2021ல்,அனைத்து வயதினரில் 2.1 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர் என்றும்,இரத்தக்கொதிப்புக்கு அடுத்தபடியாக பெரிய உயிர்கொல்லி நோயாக காற்று மாசுபாடு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக,சர்க்கரைநோய்,புகைபிடித்தல் போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது.
