Air conditioned E-Bus: நாட்டின் முதல் எலெக்ட்ரிக் டபுள்டக்கர் ஏசி பஸ்!
சென்னையில் தயார் செய்யப்பட்டு மும்பையில் தனது முதல் பயணத்தை தொடங்குகிறது நாட்டின் முதல் டபுள் டக்கர் ஏசி பேருந்து. இந்த பேருந்தை ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்.
மும்பையிலுள்ள பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து நிறுவனம் சார்பில் இயக்கப்படும் இந்த ஏசி டபுள் டக்கர் எலெக்ட்ரிக் பேருந்துகளை ஒன்றியை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்.
தற்போது மும்பை மாநகரில் பயன்படுத்துவதற்கு ஏற்ப 200 பேருந்துகளை ஒன்றிய அரசு இந்த பேருந்துகளை ஆர்டர் செய்துள்ளது. ரூ. 2 கோடி விலையுள்ள இந்த பேருந்துகள் முதல்கட்டமாக 50 டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் எஞ்சியுள்ள பேருந்துகள் அனைத்தும் டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெருக்கடியை குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீண்ட காலமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் சேவையில் இருந்து வந்த டபுள் டக்கர் பேருந்துகள் சாலையில் பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டன.
தற்போது பொதுமக்களின் வாகன பயன்பாடு முன்பை விட அதிகரித்துள்ள நிலையில், சாலையில் அதிக நெரிசல்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்பதற்கு பொதுபோக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒரே நேரத்தில் அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்கு இந்த டபுள் டக்கர் பேருந்து சிறந்த தேர்வாக உள்ளது. எனவே இந்த பேருந்து இயக்கத்தின் தேவை தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, டபுள் டக்கர் பேருந்துகள் ,முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய பரிணாமத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய டபுள் டக்கர் பேருந்துகளை விட உயரம், எடை குறைவாகவும், ஏசி வசதியோடு, மிக முக்கியமாக எரிபொருள் இல்லாத எலெக்ட்ரிக் பேருந்துகளாக அமைந்துள்ளது.
மாடி பஸ் என்று பொதுமக்களால் அழைத்துவரப்பட்ட இந்த பேருந்துகளில், கீழே வழக்கமான பேருந்து அமைப்பைுயும், மேலே செல்வதற்கு படிக்கட்டுகளும், அங்கு அமர்வதற்கு சீட்களும் உள்ளவாறு அமைப்பை பெற்று இருக்கும்.
இதையடுத்து இந்த அடிப்படை கூறுகள் மாற்றப்படாமல் எடை எடை குறைவான அலுமினயம் பாடி மூலம் உருவாக்கப்பட்டு, அதிக பயணிகளை ஏற்றி செல்லும் விதமாக விசாலமான இடமும், முழுவதுமாக ஏசியும் பொருத்தப்பட்டு, பேட்டரியில் ஓடும் விதமாக புதிய டபுள் டக்கர் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
அசோக் லேலாண்டின் துணை நிறுவனமான ஸ்விட்ச் நிறுவனம் மூலம் இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்துகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. சென்னையில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான பிளாண்டில் தயாரான இந்த பேருந்துகளுக்கு Eiv 22 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் செமி லோ ஃப்ளோர் பேருந்தாக இருப்பதோடு, பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள கதவுகள் மூலம் ஏறி, இறங்கி கொள்ளு வசதியை பெற்றுள்ளது. மேலே பகுதிக்கு செல்லும் படிக்கும், கீழ் தளத்துக்கு செல்லவும் என இந்த கதவு பொதுவானதாக கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பேருந்துகளை விட இரண்டு மடங்கு சீட்கள் இருந்தாலும், எடையானது 18 சதவீதம் வரை மட்டும் அதிகமாக உள்ளது மேலே செல்வதற்கு இரண்டு இடங்களில் படிகள் இருப்பதோடு, எமர்ஜென்சி கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன.
231W பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த பேருந்தில் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.