Chennai: உடல்நலம்தான் முக்கியம்.. விலைமதிப்புள்ள பொருட்களை விற்கும் சென்னை வாசிகள்! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
ஆரோக்கியத்தை சென்னை மக்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை காட்டுகிறது இந்த அறிக்கை!
கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மாற்றம், ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்தும் வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தொற்றுநோய், அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம், அவர்கள் எப்படி தங்கள் உணவை கண்காணிக்கிறார்கள். அவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார்களா? போன்றவை உட்பட பல வழிகளில் அவர்களின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை, ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் (ABCL) -ன் சுகாதார காப்பீட்டு துணை நிறுவனமான ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ABHICL) வெளியிட்ட இந்த நியூ ஹெல்த் நார்மல் ரிப்போர்ட் காண்பிக்கிறது.
மருத்துவ அவசரநிலைகளை சமாளிப்பதற்கான நிதித் தயார்நிலையை உறுதிப்படுத்துவது குடும்பத்தின் நிதித் திட்டமிடலின் ஒரு பகுதியாகவும் மாறியிருக்கிறது.
நியூ ஹெல்த் நார்மல் ரிப்போர்ட்டின் படி, சென்னையில் பதிலளித்தவர்கள் தேசிய அளவான 52% உடன் ஒப்பிடும்போது, 62% பேர் மருத்துவ அவசர நிலைகள் ஏற்படுமானால் பயன்படுத்த போதுமான பணத்தை ஒதுக்கியுள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும்,தேசிய அளவில் 78.5% உடன் ஒப்பிடும்போது, 84% பேர் தங்கள் குடும்ப மருத்துவச் செலவுகளை காப்பீடு செய்த ஒரு பணியமர்த்துவோரை தேடுவதாகக் கூறியிருக்கின்றனர்.
,‘நியூ ஹெல்த் நார்மல்’ - ல் தேசிய அளவில் 84.5% உடன் ஒப்பிடும்போது, சென்னையில் பதிலளித்தவர்களில் 85% பேர் உடல்நலக் காப்பீட்டை வாங்குவதற்காக ஒரு ஆடம்பரப் பொருளை விற்பார்கள் என்று கூறுகிறது.
தலைமை நிர்வாக அதிகாரி பேட்டி!
இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் குறித்து பேசிய ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மயங்க் பத்வால், “தொற்றுநோய் காரணமாக, 'நியூ ஹெல்த் நார்மல்' - ல், மக்கள் ஒரு ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை ஆதரிக்கக்கூடிய வழிகளை ஆன்லைனிலும் மற்றும் ஆஃப்லைனிலும் தீவிரமாக தேடுகின்றனர்.
இது, அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம், அவர்களின் உணவை எவ்வளவு உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார்களா போன்றவற்றிலும் அவர்களின் நடத்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இருப்பினும், ஒரு புதிய பழக்கத்தை ஏற்றுக்கொள்வது பெரும்பாலானவர்களுக்கு சவாலாக உள்ளது. மேலும் அவர்களின் ஆரோக்கிய பயணத்தின் கடைசி கட்டத்தை முடிக்க மக்களை தூண்டுவதும் ஊக்குவிப்பதும் காலத்தின் தேவையாக இருக்கிறது."என்று கூறினார்.
ABHICL இன் நியூ ஹெல்த் நார்மல் அறிக்கை, சென்னைவாசிகள் உடற்பயிற்சி செய்வதில் அதிக நாட்டத்தையும், அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளனர். இருப்பினும் அதிக கவனம் தேவைப்படுகிறது என்பதை வெளிப்படுத்தியது.
இந்த அறிக்கையின்படி, தேசிய அளவில் 84% உடன் ஒப்பிடும்போது, சென்னையில் பதிலளித்தவர்களில் 77% பேர், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று நம்புகிறார்கள்.
மேலும், சென்னையில் பதிலளித்தவர்களில் 85% பேர், தேசிய அளவில் 69.2% உடன் ஒப்பிடும்போது, தாங்கள் நடந்த அடிகளின் எண்ணிக்கை போன்ற அவர்களின் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்கின்றனர்.
சென்னையில் உள்ள உடற்பயிற்சி பிரியர்களும் பாரம்பரிய ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டு அடிப்படையிலான உடற்பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு மாறியுள்ளனர். ஏனெனில் சென்னையில் பதிலளித்தவர்களில் 95% பேர் ஆன்லைன் உடற்பயிற்சி வகுப்புகள், யூடியூப் வீடியோக்கள், உடற்பயிற்சி/யோகா தொடர்பான நிகழ்ச்சிகளை OTT தளங்களில் தேடினர்.
சென்னையில் மனநல விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, ஆனால் உதவி பெறுவதற்கு சங்கடம் ஒரு தடையாக உள்ளது. தேசிய அளவில் 88.6% உடன் ஒப்பிடும் போது, சென்னையில் 91% பதிலளித்தவர்கள் உடல்நல காப்பீட்டு பாலிசியில் மன நல ஆலோசனையும் சேர்க்கப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள்.
சுவாரஸ்யமாக, தேசிய அளவில் 68% உடன் ஒப்பிடும்போது, சென்னையில் பதிலளித்தவர்களில் 75% பேர், மக்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி மிகவும் கவலைப்படுவைதால் மனநல நிபுணரைச் சந்திப்பதில் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த தயக்கம் நகரத்தில் உள்ள மனநலத்துடன் தொடர்புடைய சங்கடத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கிறது. இது பலரையும் அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை அணுகுவதைத் தடுக்கிறது.
மனநலம் குறித்து பொதுமக்களுக்குத் தொடர்ந்து கற்றுக்கொடுத்தலின் மூலமும், உதவியை நாடுவது தொடர்பான பயம் மற்றும் வெட்கத்தைக் குறைப்பதன் மூலமும், மனநலப் பிரச்சினைகளுடன் போராடுபவர்களுக்கு மிகவும் ஆதரவான சூழலை இந்த நகரம் உருவாக்க முடியும் என்று ABHICL நம்புகிறது.
டாபிக்ஸ்