Cyclone Strom Alert:வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8ஆம் தேதிக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ,,
வங்கக்கடலில் இன்று காலை 5:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து வரும் 8ஆம் தேதி அதே திசையில் நகர்ந்து புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் 8ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்க வாய்ப்புள்ளதால் இதன் எதிரொலியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே சமயம் வறண்ட காற்றின் தாக்கத்தால், கரையை நெருங்கி வலுவிழக்கவும் வாய்ப்பு உள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகர்க்கூடும் என்பதால் வரும் 7ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 8,9 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதுபுயலாக உருவானால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் முதல் புயல் இதுவாகும்.
டாபிக்ஸ்