TTDC சென்னை-திருப்பதி சுற்றுலாவுக்கு 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு
சென்னையிலிருந்து திருமலை திருப்பதிக்கு தினசரி சுற்றுலா செல்லும் பேக்கேஜ் டூருக்கு இனி 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (TTDC) இயக்கி வருகிறது.
சென்னையில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான சர்வரில் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு 48 மணிநேரத்துக்கு முன்பே பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யும் கால அவகாசம் 2 நாட்களில் இருந்து 7 நாட்களாக உயர்த்தப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இனி சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்ல 7 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை சென்னை-2 என்ற முகவரியிலோ, 044-25333333, 25333444 என்ற தொலைபேசியிலோ 180042531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
தற்போது கோடைக்கால விடுமுறை என்பதால் பக்தர்கள் நேரடியாகவோ அல்லது திருப்பதி தேவஸ்தானத்தின் 300 ரூபாய் தரிசனத்துக்கு மிகுந்த கிராக்கி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ள இந்தப் புதிய டூர் பேக்கேஜ் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.