Tiger Attack: நாடு முழுவதும் புலிகள் தாக்குதலால் 302 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 302 பேர் புலி தாக்குதலால் உயிரிழந்திருப்பதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலி தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை மகராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் 55 சதவீதத்துக்கும் மேல் இருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்ப்பட்டுள்ளது. புலி தாக்குதல் காரணமாக பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ. 29.57 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் 112, 2021இல் 59, 2020இல் 51, 2019இல் 49, 2018இல் 31 பேர் புலி தாக்கி உயிரழந்துள்ளனர். இந்த தகவல் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தெரிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் புலி தாக்குதலால் உயிரை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து மட்டும் 170 பேர் உயிரிழந்துள்ளனராம். 2022ஆம் ஆண்டில் 85, 2021இல் 32, 2020இல் 25, 2019 இல் 26, 2018இல் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் 39, மேற்கு வங்கம் மாநிலத்தில் 29 பேர் இறந்துள்ளனர் எனவும், புலி தாக்குதல் பாதிப்பு அதிகம் இருக்கும் பிகார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புலி தாக்குதலால் ஒருவர் கூட இறக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புலிகளின எண்ணிக்கையானது 2018இல் 2,967 என இருந்த நிலையில், கடந்த 2022 வரை 3, 682ஆக உயர்ந்துள்ளது. அதன்படி 6 சதவீதம் வரை புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் புலிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கர்நாடக, உத்தரகண்ட், மகராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்