‘செக்ஸ் வேண்டாம்… நீண்ட நாள் வாழலாம்’ 125 வயது தாத்தாவின் ரகசியம் இது தானாம்!
Swami Sivananda: '100 ஆயுசு' என்று இன்றும் வாழ்த்துகிறார்கள். ஆனால், அதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா? என்ற கேள்வி எல்லோருக்கும் தோன்றும். ஆம், நீண்ட ஆயுளோடு வாழ முடியும் என்கிறார் 125 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா.
அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலத்திலும் கூட, யாராலும் மரணத்தை தடுக்க முடியாது. வேண்டுமானால் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் உதவியுடன் தள்ளிப்போட முடியும். இன்றைய பாஸ்ட் புட் உணவு பழக்க வழக்க வாழ்க்கையில் 30 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தக் காலத்திலும் கூட '100 ஆயுசு' என்று இன்றும் வாழ்த்துகிறார்கள். அதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா? என்ற கேள்வி எல்லோருக்கும் தோன்றும். ஆம், நமது நாட்டிலே உலகின் வயதான நபர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுதா?
யோகா குரு சுவாமி சிவானந்தா என்பவர் 125 வயதை கடந்து புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் வாழ்ந்து வருகிறார். இவரை பற்றி நிறைய செய்திகள் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தற்போது சுவாமி சிவானந்தா கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனையின்படி ஜப்பானை சேர்ந்த ஜிரோமான் கிமுரா தான் உலகிலேயே மிகவும் வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அதைத்தான் நமது நாட்டைச் சேர்ந்த சிவானந்தா முறியடித்து சாதனை மைல்கல்லை எட்டியிருக்கிறார்.
சிவானந்தா, ஆகஸ்ட் 8, 1896-ல் பிறந்ததாக அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள கோயிலின் பதிவேட்டில் குறிப்பிட்டிருந்ததை வைத்து முதியவர் சிவானந்தா வயதை இந்திய பாஸ்போர்ட் ஆணைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
125 வயதாகும் யோகா குரு சிவானந்தா தனது வாழ்க்கை முறை குறித்து கூறுகையில், மிக எளிமையான ஒரு சாதாரண வாழ்வை தான் நான் வாழ்ந்து வருகிறேன். பாலும், பழமும் உண்பது கிடையாது. இவை ஆடம்பரமான உணவுகள் என்று நான் நினைக்கிறேன். சிறுவயதில் வெறும் வயிற்றில் பல நாட்கள் தூங்கி இருக்கிறேன்.
வறுத்த உணவுகளை சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் உணவில் எண்ணெய், மசாலா பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவேன். செக்ஸ் வைத்துக் கொள்ளாதது, ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பதால் நான் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
5.2 அடி உயரம் கொண்ட சிவானந்தா தரையில் பாயில் உறங்குவதும், தலையணையாக மரப்பலகையை உபயோகிப்பதும் வியப்பிற்குரிய ஒன்று. இவர் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தினமும் எழுந்தவுடன் உடனே தியானம் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தினமும் 7-8 மணி நேரம் எந்த தொந்தரவும் இன்றி தூங்கும் பழக்கம் உடையவர். கணினி, செல்போன், பைக் என்று செயற்கையான எந்திரங்கள் எதையும் பயன்படுத்தாமல் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கடந்த ஆண்டு சிவானந்தாவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.