southafrica cheetah in india: தென்ஆப்பரிக்கா சிறுத்தைகள் இந்தியா வருவதில் தாமதம்
இந்தியாவுக்கு 12 தென்ஆப்பரிக்கா சிறுத்தைகளை கொண்டு வரும் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1952இல் இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுத்தை இனங்களை மீண்டும் உருவாக்குவதற்கு 2009ஆம் ஆண்டில் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவை செயல்வடிவம் பெறாத நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைகள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டன. இந்த சிறுத்தைகள் பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டது.
இந்த சிறுத்தைகள் சில காலம் தனிமைப்படுத்தலுக்கு பிறகு வேலியுடன் கூடிய வேட்டையாடும் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
இதைப்போல் தென்ஆப்பரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்கு கடந்த ஜூலை மாதம் இந்திய அலுவலர்கள் தென்ஆப்பரிக்காவுக்கு சென்று 12 சிறுத்தைகளை தேர்வு செய்தனர். இதில் 5 பெண் சிறுத்தைகளும் அடங்கும்.
இந்திய வனஉயிரன சட்டத்தின்படி சிறுத்தைகள் ஒரு மாத காலம் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதற்காக தென்ஆப்பரிக்காவின் குவாசுலு மாகாணத்தில் 3 சிறுத்தைகளும், லிம்போபோ மாகணத்தில் 9 சிறுத்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டன.
இதைத்தொடந்து சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர தற்போது வரை தென்ஆப்பரிக்கா அரசுடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இதற்கான ஒப்பதலை தென்ஆப்பரிக்கா அணி இன்னும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
தனிமைப்படுத்திலில் இருந்ததால் சிறுத்தை வேட்டைக்கு செல்லாமல் எடை அதிகரித்துள்ளதாக உடல் தகுதியை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, "இந்தியாவுக்கு சிறுத்தை அனுப்பும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும், அதிபர் ஒப்புதல் அளித்த பிறகு முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தாகும்" எனவும் தென்ஆப்பரிக்கா வனத்துறை அமைச்சர் பார்பரா கிரீசி தெரிவித்துள்ளார்.