World Radiography Day 2023 : உலக கதிரியக்க நாள் – முக்கியத்துவம், வரலாறு, கருப்பொருள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்!
World Radiography Day : உலக கதிரியக்க நாள், உலக சுகாதார விழிப்புணர்வு நாளாகும். இந்த நாள் நவம்பர் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ரேடியேசன் தெரபி கொடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின் பங்கு என அனைத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.

உலக கதிரியக்க நாள், உலக சுகாதார விழிப்புணர்வு நாளாகும். இந்த நாள் நவம்பர் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, ரேடியேசன் தெரபி கொடுப்பது, ஒரு ரேடியோகிராஃபரின் பங்கு என அனைத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.
இந்த நாளில் ஐரோப்பியன் ரேடியாலஜி சொசைட்டி, வட அமெரிக்க ரேடியாலஜிக்கல் சொசைட்டி, அமெரிக்கன் ரேடியாலஜி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அவற்றில் சுகாதாரத்துறையில் ரேடியாலஜி மற்றும் ரேடியாலஜிட்களின் பங்கையும், ரேடியலாஜி தொழில்நுட்ப வல்லுனர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார்கள்.
உலக கதிரியக்க நாளின் முக்கியத்துவம்
பாதிக்கப்பட்ட மனித உடல்கள் மற்றும் விலங்குகளின் உள் உறுப்புகளை படம் பிடித்து அதில் உள்ள பிரச்னைகளை கண்டுபிடித்து அதற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவத்துறையின் ஒரு பகுதி ரோடியாலஜி ஆகும். ஒரு நோயை கண்டுபிடிப்பதற்கும், ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் பல்வேறு வகை படங்களை தொழில்நுட்பங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. அவை ஃப்ளுரோஸ்கோப்பி, பொசிட்ரான் எமிசன் டோமோகிராஃபி, கம்ப்யூடட் டோமோகிராஃபி (சிடி ஸ்கேன்) அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே ரேடியோகிராஃபி, மேக்னடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் (எம்ஆர்ஐ) ஆகியவை ஆகும். படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை சிறிய ஊடுருவும் அறுசைசிகிச்சைகளுக்கு வழிகாட்ட பயன்படுத்துவது இன்டர்வென்ஷ்னல் ரேடியாலஜி என்று அழைக்கப்படுகிறது.