World Photography Day 2024: ஸ்மைல் ப்ளீஸ்.. இன்று உலக புகைப்பட தினம்.. இதன் வரலாறு, முக்கியத்துவத்தை அறிவோம்!
World Photography Day: உலக புகைப்பட தினத்தின் தேதி, வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

World Photography Day 2024: ஸ்மைல் ப்ளீஸ்.. இன்று உலக புகைப்பட தினம்.. இதன் வரலாறு, முக்கியத்துவத்தை அறிவோம்! (pexel)
புகைப்படங்களை யாருக்குதான் பிடிக்காது! அனைவருக்கு பிடித்தது புகைப்படங்கள். நம்மை அப்படியே பதிவு செய்ய உதவும் ஒரு கலை. புகைப்படங்கள் இதற்கு மட்டுமல்ல, இன்று அறிவியல் உலகிலும் கூட பயன்படுகிறது. பலருக்கு புகைப்படங்கள் எடுப்பது பொழுதுபோக்காக இருந்தாலும் கூட அந்தத் துறை மிகப் பெரியது.
புகைப்படத்துறையில் ஜொலித்த வாழ்வில் முன்னேறியவர்கள் பலர் இருக்கிறார்கள்.
உலக புகைப்பட தினம் 1837 ஆம் ஆண்டில் லூயிஸ் டாகுவேரே உருவாக்கிய புகைப்பட செயல்முறையான டாகுரியோடைப் கண்டுபிடிப்பை நினைவுகூருகிறது, இது புகைப்பட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது. புகைப்படம் எடுத்தல் கலை மற்றும் அறிவியலுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.