கீல்வாதம் பற்றி கட்டுகதைகளும், நிஜங்களும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கீல்வாதம் பற்றி கட்டுகதைகளும், நிஜங்களும்!

கீல்வாதம் பற்றி கட்டுகதைகளும், நிஜங்களும்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 04, 2022 06:12 PM IST

மூட்டு வலி அல்லது மூட்டு வீக்கம் வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் 20 முதல் 40 வயதுடையவர்களுக்கும், அவர்கள் வாழ்க்கை முறைக்கும் தகுந்தவாறும் இந்தப் பாதிப்பானது அதிகம் உள்ளது.கீல்வாதம் எனப்படும் மூட்டு வலி அல்லது வீக்கம் குறித்த கட்டுக்கதைகளும், மருத்துவர்கள் தரும் விளக்கங்களையும் தெரிந்து கொள்வோம்.

<p>கீல்வாதம் தொடர்பாக பகிரப்படும் கட்டுக்கதைகளும் நிஜங்களும் தெரிந்துகொள்வோம்</p>
<p>கீல்வாதம் தொடர்பாக பகிரப்படும் கட்டுக்கதைகளும் நிஜங்களும் தெரிந்துகொள்வோம்</p>

மூட்டு வலிகளை பல வகைப்படுத்தலாம் என்றபோதிலும் கீல்வாதம் (ஆஸ்தியோ ஆர்த்ரிட்டிஸ்), முடக்கு வாதம் (ரூமத்தாய்ட் ஆர்த்ரிட்டிஸ்) என்று பொதுவாக ஏற்படும் பாதிப்புகளாகவே உள்ளது.

கீல்வாதமானது எலும்புகளுக்கு இடையே உள்ள குறுத்து எலும்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியானது, மூட்டுகளை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமில்லாமல் தசை, இணைப்பு திசுக்கள், தசை நார்களிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.

அத்துடன் 20 முதல் 40 வயதினரிடையே இந்தப் பாதிப்பானது அதிகமாக காணப்படுகிறது . இதனால் அவர்களின் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

பொதுவாக கீல்வாதம் குறித்து கூறப்படும் கட்டுக்கதைகள் ஏராளமாக இருப்பதால், அவை பற்றிய நிஜங்களை தெரிந்து கொள்வோம்

வயதானவர்களுக்கு மட்டுமே கீல்வாதம் பாதிப்பு ஏற்படும்?

பொதுவாக கீல்வாதம் அதிகமாக வயதானவர்களை பாதிக்கப்பட்டாலும், எந்த வயதினரையும் தாக்ககூடும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். 20 முதல் 40 வயதினரை முடக்கு வாதம் பாதிக்ககூடும்.

உங்கள் மூட்டுகளில் வலி ஏற்பட்டால் அது கீல்வாதமா?

இது உண்மையில்லை. மூட்டுகளில் வலி ஏற்படுவது, அசெகரியமாக உணர்வதை கீல்வாதம் என்று குறிப்பட முடியாது. மூட்டுப்பகுதியை சுற்றி ஏற்படும் வலி, தசைநார்கள் அழற்சி, பர்சிடிஸ் என்ற நீர்சுரப்பியில் வலி, காயங்கள் போன்றவை கீல்வாதம் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

கீல்வாதம் பாதிப்பு இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது

உடற்பயிற்சி செய்வதை கீல்வாதம் பாதிப்பு இருப்பவர்கள் தவிரக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம்.

மூட்டுகளின் வலிமையை பராமரிக்கவும் மற்றும் அதன் இயக்கத்துக்கு உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது. கீல்வாத் பாதிப்பு இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் அவர்களுக்கு மூட்டுகளில் வலி குறைவதுடன், கூடுதல் ஆற்றல், நல்ல தூக்கம், அன்றாட செயல்பாடுகளில் மாற்றம் கிடைக்கிறது.

இடுப்பு மற்றும் முழங்கால் கீழ்வாதம் பாதிப்பு இருப்பவர்களுக்கு உடற்பயிற்சியானது முக்கியமானதாக கருதப்படுகிறது.

உடற்பயிற்சியின்போது மூட்டுகளில் புண் ஏற்பட்டால் அதற்கு வெப்பத்தை பயன்படுத்துவதே சிறந்த சிகிச்சையாக உள்ளது

இது உண்மையில்லை. குளிர்ச்சி அல்லது வெப்பம் என இரண்டும் மூட்டுகளில் ஏற்பட்ட புண்களுக்கு நல்ல பலனை தரும். தசை மற்றும் மூட்டுகளில் உள்ள விறைப்புத்தன்மை, வலியை குறைக்க உடற்பயிற்சிக்கு முன்பு வெப்பத்தை பயன்படுத்தலாம். அதேபோல் குளிரச்சியும் வலியை குறைப்பதோடு, வீக்கத்தையும் குறைக்கிறது.

கீல்வாதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது

கீல்வாதம் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிகள் இல்லை. வயது முதிர்வு போன்ற காரணங்கள் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. இருப்பினும் இந்த ஆபத்துகளை குறைக்கவும், அதன் பாதிப்புகளை மெதுவாக்கவும் செய்யலாம். அதிக உடல் எடை இருப்பவர்களுக்கு முழங்கால் கீழ்வாதம் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துகள் உள்ளன.

நோய் இருப்பதை அறிந்த பிறகு எதுவும் செய்யக்கூடாது

இந்த நோய்க்கு என தனியான சிகிச்சை இல்லை என்றாலும், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு பொறுத்து அதன் போக்கு மாறுபடும். அதன் பாதிப்பு அறிகுறிகளை தடுப்பதற்கு உரிய மருத்துவமுறைகள் உள்ளது.

அதேபோல் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் பாதிப்புகளை மெதுவாக்குகிறது. உடல் எடையை பராமரிப்பது, புகைப்பிடித்தலை தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, நல்ல தூக்கம் போன்றவற்றால் இந்த பாதிப்பை ஏற்படுவதை தவிர்க்கலாம் அல்லது தள்ளிப்போடலாம்.

வானிலை மாற்றங்கள் கீல்வாதம் பாதிப்பை மேலும் மேசாமாக்கும்

மழைக்காலம் அல்லது ஈரப்பதம் மிக்க வானிலை நேரங்களில் கீல்வாதங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற பேச்சு உள்ளது. ஆனால் இதை உறுதியாக சொல்ல முடியாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கீல்வாதம் தொடர்பாகவும், அதை தடுப்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற்றும் வருவதாக கூறப்படுகிறது.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.