Gardening Tips: வீட்டுத்தோட்டத்தில் என்ன காய்கறிகள் வளர்க்கலாம்? பக்கா லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening Tips: வீட்டுத்தோட்டத்தில் என்ன காய்கறிகள் வளர்க்கலாம்? பக்கா லிஸ்ட் இதோ!

Gardening Tips: வீட்டுத்தோட்டத்தில் என்ன காய்கறிகள் வளர்க்கலாம்? பக்கா லிஸ்ட் இதோ!

Suguna Devi P HT Tamil
Sep 26, 2024 05:18 PM IST

Gardening Tips: நமது வீட்டு சமையலுக்கு தேவையான பெரும்பாலான காய்கறிகளை வீட்டு தோட்டத்திலேயே எளிமையான வழிமுறைகளை பின்பற்றி வளர்க்கமுடியும்.

Gardening Tips: வீட்டுத்தோட்டத்தில் என்ன காய்கறிகள் வளர்க்கலாம்? பக்கா லிஸ்ட் இதோ!
Gardening Tips: வீட்டுத்தோட்டத்தில் என்ன காய்கறிகள் வளர்க்கலாம்? பக்கா லிஸ்ட் இதோ!

வீட்டுத்தோட்ட அமைப்பு 

வீட்டின் வெளிப்புறத்தில் இடம் இருந்தால் அதில் எளிமையாக நமது உணவில் பயன்படுத்தும் காய்கறிகளை விளைவிக்கலாம். அதற்கு சிறந்த காற்றோட்டம், சூரிய ஒளி, நீர் வடிகால் ஆகியவை உள்ள இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் நமது வீட்டு மணலில் விளையக்கூடிய காய்கறிகளை கண்டறிந்து நட வேண்டும்.  இதனை தொடர்ந்து பாராமரித்து வந்தாலே நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவை சாப்பிட முடியும். 

மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவோர், தனி வீடாக இருக்கு பட்சத்தில் தாராளமாக தோட்டம் அமைக்கலாம். ஏனெனில் தனி வீடாக இருந்தால் மட்டுமே தோட்டம் அமைப்பதற்கு எந்த வித ஆட்சேபனையும் வராது. மேலும் கட்டடம் உறுதியானாக இருக்கக வேணும். எடை அதிகம் உள்ள தொட்டிகளை தாங்கும் வகையில் கட்டடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

செடிகளின் வகைகள்  

நமது தோட்டங்களில் பல வகையான செடிகளை வளர்க்க முடியும்.  சிறு செடிகளாக வளரக்கூடிய காய்கறி செடிகளை வளர்க்கலாம்.  கத்தரி,வெண்டை, தக்காளி,மணத்தக்காளி,கீரை வகைகள் , கொத்தமல்லி, புதினா, கொத்தவரை, மிளகாய் ,இஞ்சி,வல்லாரை, சுண்டை,முள்ளங்கி போன்ற செடிகளை வளர்க்கலாம். இவை அனைத்தும் நமது ஊர் வெப்பநிலைக்கு ஏற்ற காய்கறி செடி வகைகளாகும். இவை அனைத்திருக்கும் சரியான பராமரிப்பு கொடுத்தால் செழுமையான காய்கறிகளை கொடுக்கும். 

கொடி வகைகள் 

உங்கள் வீடுகளில் கொடி வளர்வதற்க்கு ஏற்ற கட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தால் கொடிகளையும் வளர்க்கலாம். புடலை, அவரை, பாகற்காய், கோவாக்காய் போன்ற காய்கறி கொடி வகைகளையும் வளர்க்கலாம்.  இவை வளர்வதற்கு மட்டும் பந்தல் போடும் அளவிற்கு இடம் வேண்டும். அப்போதுதான் இது நன்றாக வளரும். தரையில் அதிக இடம் இருந்தால் பூசணி கொடியும் வளர்க்கலாம்.  

மருத்துவ செடிகள் 

மேலும் நமது வீடுகளில் மருத்துவ குணம் உள்ள செடிகளையும் வளர்க்கலாம். பிரண்டை, கீழாநெல்லி, தூதுவளை, எலிமிச்சை, பூண்டு, வெங்காயம், கரிசிலாங்கண்ணி ,பசலை ஆகிய செடிகளையும் வளர்க்கலாம். ஆனால் இவை வளர்வதற்கு ஏற்ற கால சூழ்நிலை இருக்கும் இடங்களில் மட்டுமே வளர்க்க முடியும். 

நீர் பாசனம் மற்றும் உரம் 

செடிகளுக்கு தேவையான அளவு நீரை வழங்க காலை, மாலை என இரு வேளைகளிலும் நீர் விட வேண்டும். இந்த மாதிரியான தோட்டங்களுக்கு சொட்டு நீர் பாசனம் முறை அளவான நீர் மேலாண்மை வழங்குகிறது. மேலும் இயற்கையான மண் புழு உரம் ,இயற்கை உரம் இவைகளுக்கு மிக அவசியம். குறிப்பிட்ட கால இடைவெளியில் செடியின் மேல் உரமாக இட வேண்டும் பூச்சிக் கொல்லியாக வேப்பம் எண்ணெயை அளவான தெளிப்பாக பயன் படுத்தலாம். ஒவ்வோரு செடியின் வாழ்க்கை வரலாற்றை கூகுளில் படித்து தெரிந்து கொள்ளவும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.