உலக பருத்தி நாள் 2024 ஆம் ஆண்டிற்கான நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உலக பருத்தி நாள் 2024 ஆம் ஆண்டிற்கான நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

உலக பருத்தி நாள் 2024 ஆம் ஆண்டிற்கான நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

Suguna Devi P HT Tamil
Oct 07, 2024 06:30 AM IST

உலக பருத்தி தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 அன்று கொண்டாடப்படுகிறது. பருத்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் பொருளாதார நிலைத்தன்மையை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலக பருத்தி நாள் 2024 ஆம் ஆண்டிற்கான நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
உலக பருத்தி நாள் 2024 ஆம் ஆண்டிற்கான நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

உலக வர்த்தக அமைப்பு முதல் உலக பருத்தி மாநாட்டை 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று நடத்தியது. பருத்தி-4 நாடுகளான பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி ஆகியவற்றின் முன்முயற்சியின் பிரதிபலிப்பாக நடத்தப்பட்டது. 

விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீதத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பருத்தி, துணி உலகில் 80 நாடுகளில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பருத்தி விளைச்சலில் இந்தியா, அமெரிக்கா, சீனா முதல் 3 இடங்களில் உள்ளன. 

மையக்கருத்து 

உலக வர்த்தக அமைப்பானது தனது X தளத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பருத்தின் தினத்தின் மையக் கருத்தை வெளியிட்டுள்ளது. அதில் ‘நன்மைக்கான பருத்தி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பருத்தி பிரச்சினையில், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அதன் X தளத்தில், “பருத்தி ஒரு பண்டத்தை விட அதிகம். பருத்தித் துறையானது பல வளரும் நாடுகளின் பொருளாதாரங்களுக்கும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிராமப்புற சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. என குறிப்பிட்டு இருந்தது. 

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, அதன் இணையதளத்தில், 2024 ஆம் ஆண்டில், உலக பருத்தி தினம் அக்டோபர் 7 ஆம் தேதி பெனினில் உள்ள கோட்டோனோவில் கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளது.  இது சர்வதேச அளவில் அல்லாமல் ஒரு நாட்டில் நடைபெறும் முதல் நிகழ்வாக உள்ளது. மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தின் முதல் கொண்டாட்டமாகவும் உள்ளது.

இந்தியாவில் பருத்தி துறை 

இந்திய பருத்தியின் உலகளாவிய உருவத்தை மேம்படுத்துவதற்கும், "உள்ளூர்களுக்கான குரல்" முயற்சியை மேம்படுத்துவதற்கும், ஜவுளி அமைச்சகம் கஸ்தூரி பருத்தி பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி மத்திய அரசு, வர்த்தக அமைப்புகள் மற்றும் தொழில்துறையினரின் கூட்டு முயற்சியாகும்.

பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் மூலம் ஜவுளித் துறையை அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. மூலப்பொருட்கள் மற்றும் பிற உற்பத்திக் காரணிகளுக்கான அணுகலைச் செயல்படுத்துவதில் இருந்து அரசாங்கத்தின் பங்கு உள்ளது. விலை போட்டியின் விளிம்பில் அதிக செயல்திறனை அடைவதில் உற்பத்தி அமைப்பை ஆதரிப்பது மற்றும் சந்தைகளுக்கான அணுகலை எளிதாக்குகிறது.

ஜவுளித் துறையை ஒருங்கிணைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக, பிரதமர் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை(PM Mega Integrated Textile Regions & Apparel) பூங்காக்கள் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் நவீன, ஒருங்கிணைந்த, பெரிய அளவிலான, உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் ஏழு பெரிய மாநிலங்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.