உடல் சூட்டை தணிப்பது முதல் விளக்கெண்ணெயை தொப்புளில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
உடல் சூட்டை தணிப்பது முதல் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிப்பது வரை, விளக்கெண்ணெயை தொப்புளில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
விளக்கெண்ணெயை வைத்து உங்கள் தொப்புளில் மசாஜ் செய்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலின் சூடு தணிகிறது. தினமும் தொப்புளில் எண்ணெயை வைத்து நன்றாக மசாஜ் செய்யவேண்டும். தொப்புளில் இந்த எண்ணெய் தடவுவது வழக்கத்திற்கு மாறாகத் தோன்றும். ஆனால், அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இது நமது நாட்டில் பாரம்பரியமாகக் நடத்தப்படும் நடைமுறைகளுள் ஒன்றாகும். இது பல கலாச்சாரங்களிலும் பின்பற்றப்படுகிறது. இதனால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது உங்களுக்கு பல்வேறு சிகிச்சைகளைக் கொடுக்கிறது.
தொப்புளில் விளக்கெண்ணெய் மசாஜ் செய்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
தொப்புள் பகுதி உடலின் மையப்பகுதியாகக் கருதப்படுகிறது. இது உடலின் முக்கிய பாகங்களையும் நரம்புகள் மூலம் உடலின் மையப்பகுதியில் இணைக்கிறது. அந்த இடத்தில் நீங்கள் விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்யும்போது, அதை அந்த இடத்தில் உள்ள சருமம் நன்றாக உறிஞ்சுகிறது. இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இந்த சிறிய நல்ல பழக்கம் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. உடலின் முக்கிய உறுப்புக்களை நரம்பு மூலம் ஒன்றிணைக்கும் இந்த தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்து தேய்க்கும்போது, அது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.
செரிமான ஆரோக்கியம்
விளக்கெண்ணெயில், மலமிளக்கும் குணங்கள் இயற்கையாகவே உள்ளது. இது உங்கள் குடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. இதை நீங்கள் உங்கள் தொப்புளில் வைத்து மசாஜ் செய்யும்போது, இது உங்கள் வயிற்றுப்பகுதியில் ஊடுருவி, செரிமான உறுப்புக்களுக்கு இதமளிக்கிறது. மலச்சிக்கலின் அறிகுறிகளைப் போக்குகிறது.
சரும பளபளப்பு
இந்த எண்ணெயை உங்கள் உடல் உறிஞ்சி, உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் உதட்டின் வெடிப்பை குணப்படுத்துகிறது. காலில் உள்ள வெடிப்புக்களைப் போக்குகிறது. சருமத்தின் வறட்சியைப் போக்குகிறது. இந்த மூலிகை மருத்துவம், உடலின் உட்புறத்தில் நீர்ச்சத்து கிடைக்கிறது. இது உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது. சருமத்தை மேம்படுத்துகிறது.
மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது
உங்களுக்கு அதிகப்படியான மாதவிடாய் வலி இருந்தால், நீங்கள் உங்கள் தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெயை தடவவேண்டும். அது உங்களுக்கு நன்றாக உதவும். விளக்கெண்ணெயின் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வயிற்றில் உள்ள அசவுகர்யங்களைப் போக்குகிறது. வலியின் தீவிரத்தை குறைக்கிறது.
இயற்கை கழிவு நீக்கி
விளக்கெண்ணெய் உடலில் உள்ள கழிவுகளை இயற்கையான முறையில் போக்குகிறது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கக்கூடிய பாரம்பரிய முறைகளுள் ஒன்று ஆகும். இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்கக் கூடிய நணநீர் மண்டலத்தைத் தூண்ட உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. இதை நீங்கள் தொப்புளில் தடவுவது நல்லது.
தசை மற்றும் மூட்டு வலிகளைப் போக்குகிறது
மூட்டு வலி மற்றும் தசை வலிகளால் அவதிப்படுவர்களுக்கு, இது அவற்றில் உள்ள இறுக்கத்தைப்போக்குகிறது. விளக்கெண்ணெயை தடவினால், அந்த இடத்திற்கு இது இதமளிக்கிறது. உங்களுக்கு வலி உள்ள இடத்தில் சிறிது விளக்கெண்ணெயை விட்டு, மசாஜ் செய்யவேண்டும். தொப்புளில் விளக்கெண்ணெயை ஊற்றி தடவும்போது, அதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உடலுக்குள் ஊடுருவி, வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றைக் குறைக்கிறது. இது உங்கள் தசைகளில் உள்ள வலிகளையும் போக்கும் தன்மை கொண்டது.
இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல்
உங்கள் தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்யும்போது, அது உங்களுக்கு கருவுறுதலை மேம்படுத்துகிறது. இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இந்த எண்ணெயில் உள்ள குணங்கள் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதை நீங்கள் வயிற்றுப்பகுதியில் தடவி மசாஜ் செய்யும்போது, அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதுபோன்ற மசாஜ் உங்கள் உடலின் இனப்பெருக்க உறுப்புக்கள் நன்முறையில் இயங்க உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்