Health Benefits Of Nutmeg: ஜாதிக்காயின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள்
ஜாதிக்காயின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அது எதற்கு பயன்படுகிறது என்பதை இங்கு பாருங்கள்.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ஜாதிக்காயில் உள்ள 'மிரிஸ்டிசின்' என்ற பொருள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது.
ஜாதிக்காய் பொதுவாக காரமான அல்லது அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், சமையல் வாசனையாகவும் சுவையாகவும் மாறும். அதிலும் முக்கியமாக ஜாதிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆயுர்வேதத்தில், இது பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காயில் நார்ச்சத்து, தியாமின், வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஜாதிக்காய் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது ரத்த விநியோகத்தையும் மேம்படுத்துகிறது. ஜாதிக்காய் கணைய செயல்பாட்டை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. ஜாதிக்காயைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
1. ஜாதிக்காய் அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கும் திறன் கொண்டது என்று ஆராய்ச்சியில் நிரூபித்துள்ளது. கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு இரண்டும் உடலுக்குத் தேவையான பிசுபிசுப்பான பொருட்கள். இருப்பினும், இவை உடலில் அதிகமாக இருந்தால், அவை ரத்த நாளங்களில் குவிந்துவிடும். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதால் உங்கள் சமையலில் ஜாதிக்காயை அதிகம் பயன்படுத்துங்கள்.
2. பலவீனமான பாலியல் ஆற்றல் மற்றும் குழந்தையின்மை பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஜாதிக்காய் மிகவும் நல்லது. இது பாலியல் தூண்டுதலை மேம்படுத்துகிறது என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாலியல் ஆற்றலை அதிகரிப்பது மட்டுமின்றி விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு மற்றும் முன்கூட்டிய விந்து வெளியேறுதல் போன்ற பாலியல் பிரச்னைகளை நீக்குகிறது.
3. நாள்பட்ட வீக்கம் மூட்டுவலி, மூட்டு வலி, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. ஜாதிக்காய், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், உடலில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது.
4. சில பாக்டீரியாக்கள் நம் உடலில் ஆபத்தான தொற்றுநோய்களை உண்டாக்கும். எனவே ஜாதிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் தொற்று நோய்களை குணப்படுத்தலாம். ஜாதிக்காய் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு ஒரு சஞ்சீவியாக செயல்படுகிறது.
5. ஜாதிக்காய் நம் மனதை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. சிலர் குளிர்காலத்தில் சோர்வாக உணர்கிறார்கள். இது பருவகால கோளாறு என்று அழைக்கப்படுகிறது. ஜாதிக்காயை உட்கொள்வதால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இது மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. ஜாதிக்காயில் உள்ள 'மிரிஸ்டிசின்' என்ற பொருள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது. அல்சைமர் போன்ற நோய்களைக் குணப்படுத்த ஜாதிக்காய் உதவுகிறது.