Valentine's Day 2024: ஜப்பான் முதல் பிலிப்பைன்ஸ் வரை! வினோத காதலர் தின பரிசுகள்!
“Valentine's Day 2024: உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காதல் சைகைகள் முதல் கலாச்சார பழக்கவழக்கங்கள் வரை இதில் பார்க்கலாம்!”

உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காதல் சைகைகள் முதல் கலாச்சார பழக்கவழக்கங்கள்
உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு காதலர்கள் தயாராகி வருகின்றனர்.
ஒவ்வொரு தேசமும் தங்கள் கலாச்சார பின்னணி வடிவில் வித்தியாசமான முறையில் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறது.
உலகம் முழுவதும் காதலர் தினம் எப்படி கொண்டாடப்படுகிறது.
பின்லாந்து
பின்லாந்து வழக்கமான காதலர் தினத்திற்குப் பதிலாக Ystävänpäivä (YOUS-ta-van-PIE-vah என உச்சரிக்கப்படுகிறது) என கொண்டாடப்படுகிறது. பரிசுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் காதல் சைகைகளுடன் இது கொண்டாடப்படுகிறது.
