தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Valentine Day 2024: Know About This Magnificent Ways To Care For Your Partner

Valentine Day 2024: உங்கள் அன்புக்குரியவர் மீது அக்கறையை வெளிப்படுத்த அற்புத வழிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 08, 2024 02:30 PM IST

வாழ்க்கை முழுவதும் கூடவே இருப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக உங்கள் துணை இருக்கிறார் என்பதையும், அவர் மீது எவ்வளவு அளவு கடந்த அக்கறை நீங்கள் வைத்துள்ளீர்கள் என்பதையும் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்து ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றின் பெஸ்ட் வழிகள் சிலவற்றை காணலாம்.

அன்புக்குரியவர் மீது அக்கறையை வெளிப்படுத்தும் அற்புத வழிகள்
அன்புக்குரியவர் மீது அக்கறையை வெளிப்படுத்தும் அற்புத வழிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

உங்களுக்கு துணையாக வரும் நபர் வாழ்க்கை முழுவதும் உங்கள் கூடவே இருக்க வேண்டும், நீண்ட நாள் உங்களோடு பயணிக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ்கள் சிலவற்றை பார்க்கலாம்.

பாராட்டுகளை வெளிப்படுத்துதல்

ஒருவரது உண்மையான பாராட்டு, அதை பெறுபவரின் அன்றைய தினத்தை ஒளியேற்றி, சிறப்பானதொரு நாளாக மாற்றுகிறது. அந்த வகையில் உங்களின் அருமையை நேர்மையான பாராட்டு மற்றும் அதுதொடர்பான செய்கையை வெளிக்காட்டி புரிய வைக்கலாம்

முடிவுகளுக்கு மரியாதை அளித்தல்

மதிப்பு மற்றும் மரியாதை என்பது உறவுகளில் மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. உங்கள் பார்ட்னரின் முடிவுகளுக்கு மதிப்பளிப்பது என்பது, அவர்கள் உங்களுடன் இருக்கும் தருணத்தை வசதியாக உணர் வைப்பதோடு, அவர்களை இயல்பாக இருக்க வைக்க உதவுகிறது.

உறவில் மரியாதை அல்லது மதிப்பு குறைவு ஏற்பட்டால் உங்களுடன் நீண்ட நாள்கள் இருப்பதை தவிர்த்து விலகுவதற்கான சந்தர்ப்பத்தை துணை நோக்க நேரிடும்

முடியாது என்றாலும் சரி சொல்லுதல்

இதுவும் உங்கள் துணையின் முடிவுகளை நீங்கள் மதிப்பதற்கான வழியாகவே உள்ளது. உங்களது முடிவுகளை அவர் மீது கட்டாயப்படுத்துவது அல்லது திணிப்பது உங்களின் முதிர்ச்சியின்மையை வெளிக்காட்டுவதோடு, அவமரியாதையின் அடையாளமாகவே திகழ்கிறது

சர்ப்ரைஸ் செய்வது

குழந்தைகள் முதல் பெரியவர் வரை சர்ப்ரைஸ் என்ற வார்த்தை ஒரு வித ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது. அதிலும் வாழ்க்கை முழுவதும் உங்கள் கூடவே பயனிக்கும் துணைக்கு நீங்கள் கொடுக்கும் சர்ப்ரைஸ் வேறெந்த விஷயங்களுக்கும் ஈடாகாது.

எனவே அவர்களுக்கு பிடித்தமான உணவுகள், பரிசு பொருள்கள் என அவ்வப்போது வாங்கி கொடுத்து அவர்களிடமிருந்து முகமலர்ச்சியை காணுங்கள்

மோதல்களை தவிர்க்க முயற்சித்தல்

உங்களுக்கும், துணைக்கும் இடையே சண்டை ஏற்படுவது இயல்புதான். ஆனால் இதுபோன்ற மோதல்களை தவிர்ப்பது அல்லது தீர்ப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையேயான கருத்து வேற்றுமைகளை தீர்க்கும் விதமாக உங்கள் எண்ணங்கள் இருக்க வேண்டும். இதுவே உங்கள் துணை நீங்கள் சிறப்பானவர் என்பதை உணரச் செய்யும்

பரஸ்பரம் விசாரித்தல்

நீண்ட நேர பணி மற்றும் வேலைக்கு அடுத்தபடியாக உங்களது துணையிடம் அன்றைய நாள் எப்படி சென்றது என்பதை விசாரிக்க வேண்டும். உங்களது அன்றைய தினம் மோசமாக சென்றிருந்தாலும், நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஒரு சிறிய கேள்வி, செய்கை அல்லது வெளிப்பாடு போன்றவை உறவுகள் நீண்ட நாள் செல்வதற்கு அடிப்படையானதாக உள்ளது

நேரம் ஒதுக்குதல்

சிலருக்கு தங்கள் துணைக்காக காத்திருப்பதை சிறப்பான தருணமாக கருதுவார்கள். அந்த வகையில் அவர்கள் அலுவலகத்திலிருந்தோ, உறவினர் அல்லது நண்பர்களை சந்தித்த பிறகோ வந்தால் நீங்கள் அவர்களுக்காக காத்திருப்பது உங்கள் மீதான அபிப்பிராயமும், நீங்கள் எவ்வளவு சிறப்பும், மதிப்பும் மிக்கவர் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

எல்லைகளை உருவாக்குதல்

உங்கள் உறவுகளுக்கான எல்லைகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் சுதந்திரத்தை தேர்வு செய்துகொள்ளும் உரிமையை எளிதாக பெறுகிறார்கள். இதனால் அவர்கள் விரும்பியவாறு வாழ்க்கையை வாழ்வதற்கு அனுமதிப்பதற்கு வழியாக உள்ளது.

நேர்மையாக இருப்பது

நேர்மை இல்லாமல் இருப்பது, உறவுகளில் அடிப்படைத்தன்மை வலுவிழக்க செய்கிறது. எனவே உங்கள் துணையுடன் நேர்மையாக இருப்பது நீங்கள் நன்பகத்தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு வெளிக்காட்டுவதாகும்.

கட்டிப்பிடி வைத்தியம் 

உங்கள் துணைக்கு அவ்வப்போது கட்டிப்பிடி வைத்தியம் செய்வது இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிப்பதோடு, உணர்வு ரீதியாகவும் நெருக்கத்தை உண்டாக்குகிறது. அவர் மீதான அக்கறையை வெளிப்படுத்தவும், உங்களது நெருக்கத்தை காட்டவும் கட்டிப்பிடி வைத்தியத்தை அவ்வப்போது வெளிப்படுத்துங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்