Urinary Health Issue: தண்ணீர் அதிகம் பருகாவிட்டாலும் குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் வருவதன் பின்னணி காரணம் தெரியுமா?
குளிர்காலத்தில் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலும் வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி சிறுநீர் வருவது பலருக்கு எரிச்சலை தரும் விஷயமாகவே உள்ளது. ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து நிபுணர்கள் கூறும் காரணத்தை தெரிந்துகொள்வோம்.
குளிர்ச்சியான காலநிலை ஒரு புறம் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் சிறுநீர் கழிப்பதற்காக அடிக்கடி பாத்ரூமுக்கு படையெடுப்பது பலருக்கு எரிச்சலை தருகிறது. வெளிப்புறங்கள், உள்புறங்கள் என குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதன் காரணமாக தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்தபோதிலும், சிறுநீர் கழிக்கும் அளவு வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். நீங்கள் என்னதால் கம்பளி போர்வையை வைத்து உடல் முழுவதும் நன்கு சுற்றிக்கொண்டு கதகதப்பாக வைத்திருந்தாலும், இவ்வாறு நிகழ்வதன் காரணம் புரியாத புதிராகவே உள்ளது.
ஆனால் குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான பின்னணி காரணம் குறித்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அதன்படி இது நமது உடற்கூறுடன் தொடர்புடைய விஷயமாக உள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால் ஏற்படும் டைரிசிஸ் என்ற குளிர் தூண்டப்படும் நிகழ்வால் சிறுநீர் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது.
குளிர்ச்சியான காலநிலையில் ஒருவருக்கு நடுக்கம் ஏற்பட்டால், ரத்த குழாய்கள் விரிவடைந்து உறுப்புகளில் ரத்த ஒட்டம் அதிகரித்து, அழுத்தம் ஏற்படுவத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன், சிறுநீரகம் உள்பட பிற முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஒட்டம் பாய்கிறது. இந்த செயல்பாடு
வாசோகன்ஸ்டிரிக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான அளவு கழிவுகளை அகற்றுவதற்கு பதில், உங்களது சிறுநீரகம் கூடுதலாக செயல்பட்டு, அதிக அளவு கழிவுகளை வடிகட்டுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஹைபோதெர்மியா (செயற்கையாக உடல் வெப்பநிலை குறைவது) அறிகுறியாக இருக்கும் எனவும், இவை உடல் நடுக்கம், சுவாச பிரச்னை, பலவீனமான இதய துடிப்பு போன்றயும் இணைந்து ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. உடல் வெப்பநிலையானது வழக்கத்தை விட மிக குறைவாக இருந்தால் அந்த நிலை ஹைபோதெர்மியா என்று அழைக்கப்படுகிறது.
இந்த பிரச்னை ஏற்படாமல் இருக்க குளிர்காலத்திலும் உடல் ரீதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதேபோல் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்திருந்தாலும் சிறுநீர்ப்பை தொற்று ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்