Ulcer Home Remedy : அலசர் மற்றும் வாய் துர்நாற்றம் இரண்டையும் அடித்து விரட்டும் அருமருந்து! வீட்டிலே செய்ய முடியும்!-ulcer home remedy remedy to get rid of both ulcer and bad breath can be done at home - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ulcer Home Remedy : அலசர் மற்றும் வாய் துர்நாற்றம் இரண்டையும் அடித்து விரட்டும் அருமருந்து! வீட்டிலே செய்ய முடியும்!

Ulcer Home Remedy : அலசர் மற்றும் வாய் துர்நாற்றம் இரண்டையும் அடித்து விரட்டும் அருமருந்து! வீட்டிலே செய்ய முடியும்!

Priyadarshini R HT Tamil
Aug 10, 2024 05:46 PM IST

Ulcer Home Remedy : அலசர் மற்றும் வாய் துர்நாற்றம் இரண்டையும் அடித்து விரட்டும் அருமருந்தை நீங்கள் வீட்டிலே செய்ய முடியும்.

Ulcer Home Remedy : அலசர் மற்றும் வாய் துர்நாற்றம் இரண்டையும் அடித்து விரட்டும் அருமருந்து! வீட்டிலே செய்ய முடியும்!
Ulcer Home Remedy : அலசர் மற்றும் வாய் துர்நாற்றம் இரண்டையும் அடித்து விரட்டும் அருமருந்து! வீட்டிலே செய்ய முடியும்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

அல்சர்

வயிற்றின் மேல்புறத்தில் சிறு குடலில் ஏற்படும் புண்களே அல்சர் என்று அழைக்கப்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இதுவே பொதுவான அறிகுறியாகும்.

கேஸ்டரிக் அல்சர் என்பது வயிற்றுக்கு உள்ளே வருகிறது.

டியோடெனல் அல்சர் என்பது உங்கள் சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படுகிறது.

அல்சரின் அறிகுறிகள்

வயிறு எரிச்சல்

வயிறு வலி

வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு

கொழுப்பு உணவுகளை ஏற்காமை

நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்

வாந்தி

ரத்த வாந்தி,

கருப்பாக மலம் கழித்தல்,

மூச்சுத்திணறல்

மயக்கம்

சோர்வு

வாந்தி

உடல் எடையிழப்பு

பசியின்மை

பசியில் மாற்றம்

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால், மேல்புறம் வலி இருந்தால், ஃபேட்டி லிவர் அல்லது பித்தப்பை கற்களால் ஏற்படலாம். அடிவயிறு வலி இருந்தால், பெண்களுக்கு கருப்பை பிரச்னைகளாகவும், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.

அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும்.

ஆனால் நாம் வயிறு வலித்தாலே அதை ஒட்டுமொத்தமாக வயிறு வலி என்றே குறிப்பிடுகிறோம். இந்த அல்சரை குணப்படுத்த இந்த ஒரு சிறிய உருண்டை போதும்.

தேவையான பொருட்கள்

ஓமம் – 100 கிராம்

சீரகம் – 10 கிராம்

சோம்பு – 10 கிராம்

ஏலக்காய் - 2

வெல்லம் – சிறிதளவு

செய்முறை

இவையனைத்தையு தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தும் ஆறியவுடன் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.

அந்த் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துவிடவேண்டும். தேவைப்படும்போது இரண்டு ஸ்பூன் எடுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாகப் பொடித்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொண்டு, தினமும் சாப்பிட்டபின் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.

அப்போது உங்கள் உடலில் உள்ள அல்சர் குணமாகும் மற்றும் வாயில் இருந்து வீசும் துர்நாற்றம் மறைந்துவிடும். எனவே இதை சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு செரிமான சக்தியை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து உடல் சோர்வும் நீங்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.