Running Nose Remedy: சளிதொல்லையால் அவதியா? மூக்கிலிருந்து சளி தொடர்ந்து வெளியேறுவதை தடுக்க இதை பாலோ செய்யுங்க
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Running Nose Remedy: சளிதொல்லையால் அவதியா? மூக்கிலிருந்து சளி தொடர்ந்து வெளியேறுவதை தடுக்க இதை பாலோ செய்யுங்க

Running Nose Remedy: சளிதொல்லையால் அவதியா? மூக்கிலிருந்து சளி தொடர்ந்து வெளியேறுவதை தடுக்க இதை பாலோ செய்யுங்க

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 15, 2024 01:50 PM IST

சளி தொல்லையால் மூக்கில் ஏற்படும் எரிச்சலையும், மூக்கில் தொடர்ந்து சளி வெளியேறாமல் தடுக்கவும் வீட்டில் இருந்தபடியே சில முறைகளை பின்பற்றலாம்.

சளி வெளியேறுவதை தடுக்கும் எளிய வழிகள்
சளி வெளியேறுவதை தடுக்கும் எளிய வழிகள்

பனி காரணமாக சளித்தொல்லை பலருக்கும் ஏற்படுவதுடன். இதனால் தடுமம் பிடித்தல், மூக்கிலிருந்து விடாமல் சளி தொடர்ந்து வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்காக உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்று அதை கடைபிடித்தாலும், வீட்டில் இருந்தபடியே சளித்தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

மூலிகை தேநீர்

இஞ்சி, புதினா, கோமாமில் போன்றவை அல்லது சளிக்கும் நிவாரணம் தரும் வேறு ஏதேனும் மூலிகைகளை சேர்த்து டீ தயார் செய்து அவ்வப்போது பருக வேண்டும். மூலிகை தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பண்புகள் இயல்பாகவே இருப்பதால் உடலில் ஏற்படும் அழற்சிக்கு எதிராக போராடுகிறது. இவை மூக்கு பகுதியை ஆற்றுப்படுத்தவும் செய்கிறது.

ஆவிபிடித்தல்

ஒரு பானை அல்லது பாத்திரத்தில் நீர் ஊற்றி அதை நன்கு சூடாக்க வேண்டும். போதிய அளவில் சூடான பிறகு சுடு நீரிலிருந்து வெளியேறும் ஆவியை மூக்கின் வழியே மெதுவாக இழுக்க வேண்டும். நீர் இருக்கும் பாத்திரத்திலிருந்து சில இன்ச் தூரம் முகத்தை தள்ளி வைத்து ஆவி பிடித்தல் வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் வரை இதை செய்தால், மூக்கு, முக பகுதிகளில் இருந்து சளி உறிஞ்சப்படும். நாள்தோறும் இரண்டு முதல் மூன்று முறை இதை செய்யலாம்

ஆவிபிடித்தால், சூடான நீரில் குளிப்பதன் மூலமும் சளி தொல்லையில் இருந்நு விடுபடலாம். சுடு நீரில் குளிப்பதால் உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது.

நெட்டி பானை முறை

பழங்கான முறையான நெட்டி பானை பயன்படுத்துவது. நெட்டி பானை என்பது ஒரு சிறிய பாத்திரம் ஏதேனும் தளிர் இடம்பிடித்திருக்கும் கொள்கலன் ஆகும். பானையில் உப்புத் தண்ணீரை சேர்த்து, பின்னர் அந்த கரைசலை மூக்கின்ஒரு துவாரம் வழியாக ஊற்றி, இன்னொரு துவாரத்திலிருந்து வெளியேற்றவும். சைனஸ் தொல்லை இருப்பவர்கள் இதை செய்யலாம். மிகவும் கவனமாக இந்த முறையை கையாள வேண்டும். ஏனென்றால் தவறாக செய்தால் மோசமான விளைவை ஏற்படுத்தகூடும்.

காரா சார உணவு

பொதுவாக காராசார உணவுகள் சளி பிரச்னையை உருவாக்ககூடும். ஆனால் சிவப்பு மிளகாய் இருக்கும் கேப்சைசின் என்ற கெமிக்கல் சளி தெந்தரவுக்கு தீர்வாக உள்ளது. உங்கள் உணவுகளில் குடைமிளகாய், வேப்பிலை, இஞ்சி மற்றும் பிற மசாலா பொருள்களை சேர்ப்பதன் மூலம் அவை காற்றுப்பாதைகளை திறந்து சைனஸ் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கின்றன

மூக்கில் ஒத்தடம்

மூக்கிலிருந்து சளி வருவதை தவிர்க்க ஹாட் பேக் அல்லது துணியை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனையவைத்து நன்றாக நீரை பிழிந்து மூக்கின் மேல் பகுதியில் ஒத்தடம் செய்ய வேண்டும். துணியில் இருக்கும் வெப்பம் மூக்கின் துவாரங்களை திறக்க உதவுவதுடன், ஈரப்பதம் எரிச்சலை ஏற்படுத்தும் திசுக்களை ஆற்றுப்படுத்தும்.

வறண்ட காற்றை ஈரமாக்கும் வேலையை ஈரப்பதமூட்டிகள் செய்கின்றன. இவை நீரை நீராவியாக மாற்றுகின்றன. இந்த ஈரப்பதம் சளியால் ஏற்படும் எரிச்சலை போக்க உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.