ருசியான மட்டன் பிரட்டல்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ருசியான மட்டன் பிரட்டல்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

ருசியான மட்டன் பிரட்டல்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 15, 2023 07:15 AM IST

மட்டன் பிரட்டல் சூடான சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். அதேபோல் தோசை சப்பாத்திக்குக்கும் ருசி அருமையாக இருக்கும். இதே பிரட்டலில் கொஞ்சம் செமி கிரேவியாக இருக்கும்போதே இறக்கினால் இட்லி தோசைக்கும் சரியான காமினேஷன். காட்டசாட்டமான ரசம் சாதத்திற்கு இந்த பிரட்டல் ருசியாக இருக்கும்.

மட்டன் பிரட்டல்
மட்டன் பிரட்டல்

தேவையான பொருட்கள்

மட்டன்

உப்பு

மஞ்சள்

ஏலக்காய்

எண்ணெய்

பட்டை

இலவங்கம்

சோம்பு

வெங்காயம்

அன்னாசி பூ

இஞ்சி

பூண்டு

தக்காளி

மல்லித்தூள்

மிளகாய் தூள்

தேங்காய்

மிளகுதூள்

தேங்காய்

வரமிளகாய்

கறிவேப்பிலை மல்லி

செய்முறை

ஒரு கிலோ மட்டனை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் 3 துண்டு பட்டை, 5 ஏலக்காய், 2 அன்னாசி பூகொஞ்சம் சோம்பு மற்றும் 4 லவங்கம் சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் 3 வத்தலை கிள்ளி சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக சிவந்து வரும்போது அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போன பிறகு 2 தக்காளியை சேர்த்து கலந்து விட வேண்டும்.

தக்காளி மசிய ஆரம்பிக்கும் போது ஆட்டுக்கறியை சேர்த்து கலந்து விட வேண்டும். கொஞ்சமான உப்பு சேர்த்து ஒரு 5 நிமிடம் மட்டனை பிரட்டி விட்ட பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விட வேண்டும். (குக்கரில் செய்ய விரும்பினால் 5 விசில் விட்டு எடுத்து கொள்ளலாம்.)

பின்னர் மட்டனில் தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் போது மட்டன் நன்றாக வெந்துள்ளதா என பார்க்க வேண்டும்.

மட்டன் வெந்த பிறகு அதில் அரைஸ்பூன் மஞ்சள் துள் தேவை, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், 3 ஸ்பூன் மல்லித்தூளை சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூளையும் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது ருசி பார்த்து தேவையான உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் மசாலா பச்சை வாடை போகும் வரை பிரட்டி விட வேண்டும். கடைசியாக ஒரு இரண்டு கொத்து கறிவேப்பிலை மற்றும் மல்லி இலையை சேர்த்து கலந்து விட வேண்டும். அப்போது 1ஸ்பூன் மிளகு தூளை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நீள வாக்கில் நறுக்கிய தேங்காயை மசாலா பச்சைவாடை போன பிறகு பிரட்டிய மட்டனில் சேர்க்க வேண்டும். அடுப்பை ஸ்மில் வைத்து 3 நிமிடம் வரை மூடி வைத்து கலந்து விட்டால் அவ்வளவு தான் ருசியான மட்டன் பிரட்டல் ரெடி.

இந்த மட்டன் பிரட்டல் சூடான சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். அதேபோல் தோசை சப்பாத்திக்குக்கும் ருசி அருமையாக இருக்கும். இதே பிரட்டலில் கொஞ்சம் செமி கிரேவியாக இருக்கும்போதே இறக்கினால் இட்லி தோசைக்கும் சரியான காமினேஷன். காட்டசாட்டமான ரசம் சாதத்திற்கு இந்த பிரட்டல் ருசியாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.