Royal Enfield Guerilla 450 Vs Triumph Speed 400: இன்ஜின், செயல் திறன், அம்சங்கள் - எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?-triumph speed 400 vs royal enfield guerilla 450 which bike to choose - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Royal Enfield Guerilla 450 Vs Triumph Speed 400: இன்ஜின், செயல் திறன், அம்சங்கள் - எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

Royal Enfield Guerilla 450 Vs Triumph Speed 400: இன்ஜின், செயல் திறன், அம்சங்கள் - எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

Marimuthu M HT Tamil
Sep 22, 2024 12:17 PM IST

Royal Enfield Guerilla 450 Vs Triumph Speed 400: ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 மற்றும் டிரையம்ப் ஸ்பீடு 400 ஆகிய மோட்டார் சைக்கிளின் இன்ஜின், செயல் திறன், அம்சங்கள் - எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

Royal Enfield Guerilla 450 Vs Triumph Speed 400: இன்ஜின், செயல் திறன், அம்சங்கள் - எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?
Royal Enfield Guerilla 450 Vs Triumph Speed 400: இன்ஜின், செயல் திறன், அம்சங்கள் - எந்த பைக்கை தேர்வு செய்யலாம்?

இந்நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள் வாகனங்களின் செயல்திறன், பாணி, அடிப்படைக்குறிப்புகளை கீழே கொடுப்பதன்மூலம், சில வேறுபாடுகளைக் காணலாம்.

டிரையம்ப் ஸ்பீடு 400 Vs ராயல் என்ஃபீல்டு கொரில்லா: இன்ஜின் மற்றும் செயல்திறன்:

டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் 398 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் இருந்து 39 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் இருந்து 37.5 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியது. இங்குள்ள கியர் பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஆகும்.

ராயல் என்ஃபீல்டு கொரில்லா பைக்கில் இருக்கும் 450 சிசி, சிங்கிள் சிலிண்டர் உள்ளது. லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 39 பிஎச்பி பவரையும், 40 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இங்குள்ள கியர்பாக்ஸ் 6-ஸ்பீடு மற்றும் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகும்.

டிரையம்ப் ஸ்பீட் 400 vs ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450: சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்குகள்:-

டிரையம்ப் ஸ்பீட் 400 மாடலில் முன்புறத்தில் 43 மி.மீ. அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 140 மி.மீ. டிராவல் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளது. முன்சக்கரத்தில் 300 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மி.மீ. டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டிரையம்ப் ஸ்பீடு பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் மற்றும் டயர்கள் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக்கின் முன்புறத்தில் 140 மி.மீ. டிராவல் கொண்ட 43 மி.மீ. அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 150 மி.மீ. டிராவல் கொண்ட லிங்கேஜ் டைப் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளது. முன்சக்கரத்தில் 310 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 270 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் உள்ளன. இருப்பினும், ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450-ல் உள்ள டயர்கள் ஸ்போக் சக்கரங்களுடன், கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கும் பயன்படுத்தக்கூடியவை.

டிரையம்ப் ஸ்பீடு 400 Vs ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450: அம்சங்கள்

டிரையம்ப் ஸ்பீடு 400ஆனது யூ.எஸ்.பி-சி சார்ஜர் கொண்டது. டிரையம்ப் ஸ்பீடு 400-ல் வெவ்வேறு சவாரி நிலைமைகளுக்கு மாறக்கூடிய, இழுவைக் கட்டுப்பாடு போன்ற நல்ல கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆனால், கூகுள் மேப்ஸ் மற்றும் வைஃபை கனெக்டிவிட்டியுடன் கூடிய டிரிப்பர் டாஷ்போர்டு போன்ற முழு டிஜிட்டல் டிஸ்ப்ளே மூலம் ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இரண்டு பைக்குகளிலும் எல்இடி விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு பஞ்சமில்லை.

டிரையம்ப் ஸ்பீட் 400 Vs ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450-ன் விலை நிலவரங்கள்:

டிரையம்ப் ஸ்பீட் 400 மோட்டார் சைக்கிளின் விலை ரூ .2.4 லட்சமில் தொடங்குகிறது. ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக்கின் விலை ரூ.2.39 லட்சத்தில் தொடங்குகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.