Tomorrow Snacks Recipe: எல்லாருக்கும் பிடித்த ருசியான கருப்பட்டி குழிப்பணியாரம் செய்முறை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomorrow Snacks Recipe: எல்லாருக்கும் பிடித்த ருசியான கருப்பட்டி குழிப்பணியாரம் செய்முறை

Tomorrow Snacks Recipe: எல்லாருக்கும் பிடித்த ருசியான கருப்பட்டி குழிப்பணியாரம் செய்முறை

I Jayachandran HT Tamil
Apr 22, 2023 12:37 PM IST

எல்லாருக்கும் பிடித்த ருசியான குழிப்பணியாரம் செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

ருசியான கருப்பட்டி குழிப்பணியாரம்
ருசியான கருப்பட்டி குழிப்பணியாரம்

இந்தக் கருப்பட்டி பணியாரம் செட்டிநாட்டில் இருந்து உருவான ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி.

கருப்பட்டி குழிப்பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 200 கிராம்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் – 100 மி.லி

கேரட் துருவல் – ஒரு கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

பச்சைமிளகாய் – 1

கடுகு – ஒரு ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

கருப்பட்டி குழிப்பணியாரம் செய்முறை:

இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக இருபுறமும் திருப்பி வேகவிடவும்.

புதினா, தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.