Tips For Menstrual Hygiene

Tips For Menstrual Hygiene

I Jayachandran HT Tamil
Jan 08, 2023 10:04 PM IST

மாதவிடாய் காலத்தில் இந்த முன்னெச்சரிக்கையை எடுத்து மற்ற நோய்களைத் தடுக்கவும்.

மாதவிடாய் கால பாதுகாப்புகள்
மாதவிடாய் கால பாதுகாப்புகள்

இந்தியாவின் பல பகுதிகளில், மாதவிடாய் என்பது தீண்டத்தகாத செயலாக இன்றும் கருதப்படுகிறது. ஆனால் இதுபோன்ற நம்பிக்கைகள் பெண்களுக்கு எந்தளவுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை பலர் உணரவில்லை. ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க செயல்முறைக்கு மாதவிடாய் மிகவும் முக்கியமானது. எனவே இந்தக் காலத்தில் தூய்மையைப் பேணுவது மிகவும் அவசியம். இல்லையெனில், தொற்றுநோய்களுடன் சேர்ந்து ஆபத்தான பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம்.

மாதவிடாய் காலங்களில் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.

உங்கள் கைகளை கழுவவும்: ஒரே பேடை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொரு 5 மணிநேரமும் சானிட்டரி பேடை மாற்றவும். மாற்றுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பினால் கழுவவும். இதனால் பாக்டீரியா பரவாமல் தடுக்கலாம்.

பிறப்புறுப்புகளை சுத்தம் செய்யுங்கள்: மாதவிடாய் காலத்தில் தினமும் தவறாமல் குளிக்கவும். முடிந்தால் இரண்டு முறை குளிக்க முயற்சிக்கவும். ஒவ்வொரு முறை பேடை மாற்றும் போதும் உங்கள் பிறப்புறுப்பை வெந்நீரில் சுத்தம் செய்வது நல்லது. இப்படி கவனமாக செயல்பட்டால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கலாம்.

எக்காரணம் கொண்டும் பழைய காலத்தைப் போல் ஆடைகளைப் பயன்படுத்தாதீர்கள்: உலகம் வெகுதூரம் வந்துவிட்டது. இருப்பினும், சிலர் சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துவதில்லை. அம்மாவின் பழைய புடவைகள் அல்லது காட்டன் ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்றால், உடனடியாக நிறுத்தி நல்ல தரமான சானிட்டரி நாப்கின் பேடைப் பயன்படுத்தவும். இல்லையெனில், எதிர்காலத்தில் கருப்பையில் பிரச்னை ஏற்படலாம்.

பேட்களை ஒழுங்காக பேப்பரில் சுற்றி குப்பைத் தொட்டியில் போடுங்கள்: சிலர் பயன்படுத்திய பேட்களை எங்கும் வீசுவார்கள். இப்படிச் செய்தால் பிறருக்குப் பிரச்னைகள் வரலாம். மாறாக பேப்பரை ஒரு பேப்பரில் சுற்றி, கவரின் உள்ளே வைத்து டஸ்ட் பினில் போடவும்.

உணவில் கவனம் செலுத்துங்கள்: மாதவிடாய் காலங்களில் உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் திரவ உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். மாதவிடாய் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், சிறப்பு மருத்துவரை அணுகி தகவல் பெறவும்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.