Benefits of Arugampul: ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட அருகம்புல்லில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரிஞ்சுகோங்க
Health Benefits Of Doob Ghas: நோய் எதிர்ப்பு சக்தி, மலச்சிக்கல் நிவாரணம் முதல் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் மூலிகையாக அருகம்புல் இருக்கிறது. ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட அருகம்புல் தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கு அர்பணிக்கப்படும் பச்சை நிறத்திலான அருகம்புல், உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த வரமாக உள்ளது. இதில் பல்வேறு தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
இந்து மத முக்கியத்துவம் வாய்ந்ததாக அருகம்புல். அதே வேளையில் ஆயுர்வேதத்தில், இது ஒரு சக்திவாய்ந்த மூலிகையாக கருதப்படுகிறது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், எடை இழப்பு மற்றும் செரிமான பிரச்னைகளை போக்கவும் உதவுகிறது
மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம்புல்லில், வைட்டமின் ஏ, சி, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், அசிட்டிக் அமிலம், ஆல்கலாய்டுகள் மற்றும் குளுக்கோசைடு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றுடன் வைரஸ், நுண்ணுயிர், அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதோடு, கிருமி நாசியாகவும் உள்ளது.
அருகம்புல்லில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
மழைக்காலத்தில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அருகம்புல் சிறந்த அருமருந்தாக பயன்படுத்தப்படலாம்.
அருகம்புல்லி இருக்கும் வைரஸ், நுண்ணியர் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் உடலில் ஏற்படும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேனி காக்க உதவுகிறது
சர்க்கரை அளவு கட்டுப்பாடு
அருகம்புல்லில் உள்ள சைனோடான் டாக்டைலான் என்ற கலவை ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் விளைவை கொண்டுள்ளது. அருகம்புல் சாறுடன், வேப்பம்பூ சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்
மலச்சிக்கலை தடுக்கிறது
அருகம்புல் செரிமான பிரச்னைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் சாற்றை வெறும் வயிற்றில் பருகுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இது தவிர, அதன் வழக்கமான நுகர்வு குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்
எடை இழப்பு
துர்வா புல்லின் நன்மைகளில் முக்கியமானதாக எடை இழப்புக்கு உதவுவதாகும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், அருகம்புல்லுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், 4-5 கருப்பு மிளகு மற்றும் சிறிது இலவங்கப்பட்டை சேர்த்து இந்த கலவைகளை நன்கு அரைத்து, பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியை நாள்தோறும் இரண்டு முறை மோர் அல்லது தேங்காய் நீருடன் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். உடல் பருமன் ஆவதை கட்டுப்படுத்தலாம்
மன அழுத்த நிவாரணம்
அருகம்புல்லை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் வழக்கமான நுகர்வு மூளையின் நரம்புகளை ஆற்றுப்படுத்துகிறது, இதன் காரணமாக கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறையும்
அருகம்புல்லை உட்கொள்ளும் முறை
அருகம்புல்லை பல வழிகளில் உட்கொள்ளலாம். இதை சாறாக எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இது தவிர புல்லை நன்கு உலர்த்தி, பொடியாக்கி தேனுடன் அல்லது தண்ணீருடன் பருகலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்