Teddy Day 2024 : காதலர் வாரத்தில் இன்று டெடி தினம்! என்ன செய்யலாம் அந்த நாளில் இதோ ஐடியாக்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Teddy Day 2024 : காதலர் வாரத்தில் இன்று டெடி தினம்! என்ன செய்யலாம் அந்த நாளில் இதோ ஐடியாக்கள்!

Teddy Day 2024 : காதலர் வாரத்தில் இன்று டெடி தினம்! என்ன செய்யலாம் அந்த நாளில் இதோ ஐடியாக்கள்!

Priyadarshini R HT Tamil
Feb 10, 2024 06:00 AM IST

Teddy Day 2024 : காதலர் வாரத்தில் இன்று டெடி தினம்! என்ன செய்யலாம் அந்த நாளில் இதோ ஐடியாக்கள்!

Teddy Day 2024 : காதலர் வாரத்தில் இன்று டெடி தினம்! என்ன செய்யலாம் அந்த நாளில் இதோ ஐடியாக்கள்!
Teddy Day 2024 : காதலர் வாரத்தில் இன்று டெடி தினம்! என்ன செய்யலாம் அந்த நாளில் இதோ ஐடியாக்கள்!

டெடி பேர் மிருதுவான ஒரு விளையாட்டு பொம்மை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது.

தியோடர் டெடி ரூஸ்வெல்ட் என்ற 26வது அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து டெடிக்கு அதன் டெடி என்ற பெயர் கிடைத்தது.

இந்த நாளில் காதலர்கள் டெடி பொம்மைகளை பரிசளித்துக்கொண்டு, தங்கள் வாழ்வில் நீங்கள் இருப்பது மிருவான இந்த டெடியைப்போல் சுகமாவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்பதை உணர்த்துகிறார்கள்.

இந்த நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு சிறப்பு குறிப்புடன் டெடியை பரிசளித்து மகிழுங்கள். ஹாப்பி டெடி டே!

உலகமே காதலர் தினக்கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறது.

காதலர் வாரமும் துவங்கிவிட்டது. முதல் நாள் பிப்ரவரி 7ம் தேதி ரோஸ் டே எனப்படும் ரோஜா தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி ப்ரபோஸ் டே காதலை உங்கள் காதலன் அல்லது காதலியிடம் கூறும் தினம் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து சாக்லேட் தினம், சாக்லேட் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. வயது வித்யாசமின்றி குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடுவது சாக்லேட்கள்.

காதலில் ரோஜாவுக்கு அடுத்து முக்கிய இடம் பிடித்துள்ளது சாக்லேட். இந்தாண்டு சாக்லேட் தினம் பிப்ரவரி 9ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தநாளில் காதலர்கள் தங்களுக்கும், தங்கள் பார்ட்னருக்கும் பிடித்த சாக்லேட்கள் அல்லது சாக்லேட் நிறைந்த இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கின்றனர்.

சாக்லேட்களில் உள்ள கோகோ பீன்கள் உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கிறது. சாக்லேட்கள் ஒருவரின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மாயம் நிறைந்தது.

பல ஆண்டுகளாக அனைவரும் விரும்பும் ஒன்றாக சாக்லேட்கள் உள்ளது. சாக்லேட் தினத்தில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு பிடித்த சாக்லேட்கள் கொடுத்து அசத்தலாம். இது அவர்களின் நாளை மகிழ்ச்சியாக்கும்.

ப்ரபோஸ் தினத்தில் காதலை மொழியும் வழிகள்!

உன்னை காதலிப்பது என்னை சிறந்த மனிதனாக்குகிறது. நான் உன்னுடன் வாழ்வின் இறுதி நாட்கள் வரை கழிக்க விரும்புகிறேன்.

நான் நேற்று உன்னை காதலித்தேன், இன்று காதலிக்கிறேன், நாளையும் காதலிப்பேன். எப்போதும் காதலிப்பேன்.

உன்னை பார்த்த நாள் முதல் நீதான் எனது ஆத்மாவுக்கு நெருக்கமானவள். எனது வாழ்வில் வந்ததற்கும், அதை அழகாக்கியதற்கும் நன்றி.

எனது குறைகள் அனைத்தையும் அறிந்தவள் தீ, ஆனாலும் என்னை நேசிக்கிறாய். ஹாப்பி ப்ரபோஸ் டே!

என் வாழ்வின் இசை நீ, என்னை சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் அழகாக்குகிறாய். சிம்பொனியை போன்ற உன் சிரிப்பை நான் எங்கிருந்தும் பெற முடியாது.

வாழ்நாள் முழுவதும் தீராக்காதலுடன் உன்னுடன் சேர்ந்திருப்பேன் என்று நான் இன்று உறுதியளிக்கிறேன்.

நான் உன்னை எப்போதும் காதலிப்பேன். கொண்டாடுவேன். நான் உனது வாழ்வை மகிழ்ச்சியால் நிரப்புவேன். கடின காலங்களில் உன்னுடன் இருப்பேன். நான் உன்னை காதலிக்கிறேன்.

நான் உன்னை எனது வாழ்க்கையில் வரவேற்கிறேன். இரு கரங்களை விரித்து உன்னை அனைத்துக்கொள்கிறேன். நீ எனது வாழ்வை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றிவிட்டாய்.

உனது வாழ்வின் மிச்ச காலத்தை நீ என்னுடன் கழிப்பாயா? ஒவ்வொரு நொடியையும் நாம் சிறப்பாக்கலாம் என்று நான் உறுதி கூறுகிறேன். இனிய ப்ரபோஸ் தின நல்வாழ்த்துக்கள். காதலர் வாரத்தை கொண்டாடி மகிழ்ந்திருங்கள் காதலர்களே.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.