தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tb Disease : காசநோய் சிகிச்சையில், சத்தான உணவு இறப்புகளை கட்டுப்படுத்தும் – லான்செட் ஆய்வில் தகவல்!

TB Disease : காசநோய் சிகிச்சையில், சத்தான உணவு இறப்புகளை கட்டுப்படுத்தும் – லான்செட் ஆய்வில் தகவல்!

Priyadarshini R HT Tamil
Aug 11, 2023 03:10 PM IST

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில், 4 மாவட்டங்களில், ஆகஸ்ட் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி வரை செய்த ஆய்வில் சத்தான உணவு காசநோய் சிகிச்சையால், காசநோய் பாதிப்பு/இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிய வந்த செய்தி பிரபல மருத்துவ ஆய்வு பத்திரிக்கையான லான்செட்டில் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நுரையீரல் பாதிக்கப்பட்ட 2,800 காசநோயாளிகளிடம் சிகிச்சையின்போது சத்தான உணவு வழங்கப்பட்டதில், அவர்கள் மத்தியில் 108 இறப்புகள் (4 சதவீதம்) பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவர்களில் 80 சதவீதம் பேரின் உடல் எடையின் அளவு (BMI) 18க்கு குறைவாகவும், 49 சதவீதம் பேரின் BMI 16க்கு குறைவாக இருந்தும், சத்தான உணவின் காரணமாக இறப்பு 4 சதவீதம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் 35 கிலோ எடைக்கு கீழாக இருந்த காசநோயாளிகளின் இறப்பு விகிதம் 7 சதவீதம் மட்டுமே. இதே எடையில், சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட ஆய்வில் 15 சதவீதம் பேர் இறந்துள்ளனர் என்ற புள்ளி விவரமும் உள்ளது.

காசநோய் சிகிச்சையின் போதுமுதல் 2 மாதங்களில் நோயாளியின் எடை அதிகமானால், அவர்களில் இறப்பு விகிதம் 60 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காசநோயாளின் எடை மிகவும் குறைந்திருப்பது உயிரிழப்பு அதிகமாவதற்கு வழிவகுக்கிறது.

எனவே சிகிச்சையின்போது சத்தானஉணவு எடுத்துக் கொள்வதை உறுதி செய்தால், அது சிறந்த தடுப்பூசியை போன்று நல்ல பயனை அளிப்பதாக முக்கிய ஆய்வாளர் அனுராக் பார்காவா தெரிவித்துள்ளார்.

காசநோய் பாதிப்பிற்கு சர்க்கரை நோய், எய்ட்ஸ், புகை, மது எடைக்குறைவு போன்றவை எளிதில் பாதிக்கும் தன்மையை ஏற்படுத்தினாலும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக காசநோயால் பாதிக்கப்படுவதில் எடைக்குறைவு மிக முக்கிய பங்காற்றுகிறது. புதிதாக பாதிக்கப்படுவோரில் 40 சதவீதம் பேர் மிகவும் எடை குறைந்தவர்களாக உள்ளனர்.

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஆய்வில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 35 கிலோவிற்கு கீழாக இருந்தால், அவர்களின் இறப்பு விகிதம், 35 கிலோவிற்கு மேலாக உள்ளவர்களை விட 4 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.

உணவே மருந்து எனும் நம் முன்னோர்களின் பட்டறிவை நாம் அலட்சியப்படுத்தியதால் தேவையற்ற காசநோய் உயிரிழப்புகளை இன்னமும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. நல்ல சத்தான உணவே நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி நோய் வராமல் காப்பதே சிறந்தது. இத்தகவலை மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்