Ulunthu Laddu: ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. உளுந்து லட்டு செய்வது எப்படினு தெரிஞ்சிகோங்க!-tasty ulunthu laddu easy evening snacks - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ulunthu Laddu: ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. உளுந்து லட்டு செய்வது எப்படினு தெரிஞ்சிகோங்க!

Ulunthu Laddu: ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. உளுந்து லட்டு செய்வது எப்படினு தெரிஞ்சிகோங்க!

Manigandan K T HT Tamil
Jul 11, 2023 03:39 PM IST

பல நன்மைகளைக் கொண்ட உளுந்தில் சில ருசியான ரெசிப்பிகளை செய்யலாம்.

உளுந்து லட்டு
உளுந்து லட்டு

இட்லி, தோசை, வடை, அப்பளம், முறுக்கு என தமிழர்களின் சமையலில் இரண்டறக் கலந்தது உளுந்து.

சங்க இலக்கியத்தில் கூட உழுந்து என அழைக்கப்பட்டிருக்கிறது. அதிக அளவு நார்ச்சத்தும், மெக்னீஷியம், பொட்டாஷியம் சத்துக்களும் உளுந்தில் நிறைந்துள்ளது.

இப்படி பல நன்மைகளைக் கொண்ட உளுந்தில் சில ருசியான ரெசிப்பிகளை செய்யலாம்.

ருசியான உளுந்து லட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முழு உளுந்து - 1 கப்

அரிசி - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி- தேவையான அளவு

வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து முழு உளுந்து, அரிசி இவற்றையும் எண்ணெயின்றி வறுத்து நன்கு ஆறவிட்டுக் கொள்ளுங்கள்.

வறுத்த முழு உளுந்து மற்றும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து நரநரவென வரும் வரை அரைக்கவும். பின் இதனுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள் இவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இவ்வாறு அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அவ்வளவுதான் ருசியான உளுந்து லட்டு தயார்.

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த ரெசிப்பியை செய்து கொடுக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.