Chettinadu recipe: சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chettinadu Recipe: சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?

Chettinadu recipe: சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Jan 18, 2023 11:02 AM IST

சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.

செட்டிநாடு கோழி குழம்பு
செட்டிநாடு கோழி குழம்பு

கோழி -1 கிலோ

வெங்காயம்- 3

தக்காளி -3 இஞ்சி

பூண்டு விழுது - 2 மேசைகரண்டி

பச்சை மிளகாய் - 2

கல்பாசி - 4

கறிவேப்பில்லை - 1 கொத்து

கொத்த மல்லி தலை - ஒரு கைப்பிடி

லெமன் ஜூஸ் - 4 மேசை கரண்டி

மஞ்சள் தூள் - 1 மேசை கரண்டி

எண்ணெய் - 4 மேசைகரண்டி

உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

தனியா - 7 மேசைகரண்டி

சீரகம் - 1/2 மேசைகரண்டி

சோம்பு - 1 மேசைகரண்டி

மிளகு - 2 மேசை கரண்டி

கசகசா - 2 மேசைகரண்டி

பட்டை - 3 துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 4

ஜாதிபூ - 4

அன்னாசி பூ - 1

வரமிளகாய் - 10

தேங்காய் - 2 மேசைகரண்டி

பொட்டுகடலை - 1 மேசைகரண்டி

செய்முறை:

மேற்குறிய அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனி தனியாக வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும்.

கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், லெமன் ஜூஸ் சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கல் பாசி, பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் .நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். இப்போது தக்காளி சேர்க்கவும்.

2 நிமிடம் கழித்து சிக்கனை போட்டு அரைத்த மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

அனைத்து மசாலா பொருட்களும் சிக்கன் உடன் சேர்ந்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு தண்ணீர் 1 கப் அல்லது தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.

அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் . சிக்கன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் கருவேப்பிலை, கொத்த மல்லி தலை சேர்த்து இறக்கவும்.

பிரியாணி, இட்லி, கல்தோசை, சாப்பாத்தி, பரோட்டா,சாதம், அனைத்துடனும் சாப்பிட காரசாரமாக சுவையாக இருக்கும்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.