Foods That Increase Constipation: ‘மலச்சிக்கலால் அடிக்கடி பாதிக்கப்படுவர்களா நீங்கள்?’: இந்த 3 உணவுகளை எடுக்காதீங்க!
Foods That increase constipation: மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மோசமடைவதைத் தடுக்க இந்த 3 உணவுகளைத் தவிர்க்கவும்.
Foods That Increase Constipation: மார்ச் மாதம் பிறந்ததில் இருந்து வெப்பக் காற்று அதிகரித்து வருகிறது. இந்த காலத்தில் மலச்சிக்கல், உடலில் சிக்கலை ஏற்படுத்துகிறது. நாட்டின் பல இடங்களில் புழுக்கம் அதிகரித்து இருப்பதால்,போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலர் எடுக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, அடிக்கடி நீர் குடிப்பது, குளிர்ச்சியாக உடம்பினை வைத்துக்கொள்வது, நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது ஆகியவை அதிகரிக்கும் வெப்பநிலையை சமாளிக்க உதவும்.
கோடை அதிகரிக்க மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்னையாகும். ஏனெனில், கடுமையான வெப்பம் எளிதில் உடலில் வியர்வையை வெளியேற்றும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் மலத்தை மென்மையாக்கி, உங்கள் குடல் இயக்கங்களுக்கு உதவும் அதே வேளையில், இதற்கு நேர்மாறாக செயல்படும் சில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகளை நீங்கள் உண்டால் மலத்தை கடினமாக்கி விடுகின்றன. மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
உங்களுக்கு ஏற்கனவே மலச்சிக்கல் இருந்தால், பின்வரும் உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பாவ்சர் மலச்சிக்கல் இருந்தால் இந்த மூன்று உணவுகளை மட்டும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.
1. சீரகம்:
டாக்டர் பாவ்சர் கூறுகையில், சீரகம் செரிமானத்திற்கு நல்லது. ஆனால், அதே நேரத்தில் உடலில் வறட்சி மற்றும் அதில் இருக்கும் நீரினை உறிஞ்சக்கூடியது. இது மலச்சிக்கலை மோசமாக்கும்.
"ஆயுர்வேதத்தில் ஜீரகம் ஜீரகா என்று அழைக்கப்படுகிறது. செரிமானம் தரும் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. எனவே ஜீரகா என்றால் ‘ஜீரணிக்கும்’ என்ற வார்த்தையில் இருந்துபெறப்பட்டது. இது பித்தத்தை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமானத்தில் ஜீரகம், ஒளி போன்றது. சீரகம், இயற்கையில் உலர்த்தும் தன்மை கொண்டது மற்றும் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே, இது பசியின்மை, வயிற்றுப்போக்கினை சரிசெய்ய உதவும். ஆனால் மலச்சிக்கல் உண்டு செய்யக்கூடியது "என்று ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பாவ்சர் கூறுகிறார்.
2. தயிர்:
ஆயுர்வேதத்தின் படி, தயிர் ஜீரணிக்க எளிதானது. ஆனால், இயற்கையில் இது உடலில் இருக்கும் நீரினை உறிஞ்சக்கூடியது மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டால் தவிர்க்கப்பட வேண்டும்.
"தயிர் சுவையை மேம்படுத்துகிறது. மேலும் தயிர் அதிகம் எடுத்துக்கொண்டால், உடலில் சூட்டைக் கிளப்பும் தன்மை கொண்டது. தயிர், ஜீரணிக்க கடினமானது மற்றும் சீரகத்தைப் போலவே இயற்கையில் உடலில் இருக்கும் நீரை உறிஞ்சக்கூடியது. எனவே, இது மலச்சிக்கலை எளிதில் உண்டாக்கிவிடும்" என்று ஆயுர்வேத டாக்டர் பாவ்சர் கூறுகிறார்.
3. காஃபின்:
காஃபின், எனப்படும் காபி தூளில் இருந்து செய்யப்படும் காபி, உங்கள் குடல் அசைவுகளை எளிதாக்கும் என்று நீங்கள் நினைத்தால், அதன் நுகர்வு நீரிழப்பை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் மலச்சிக்கலை மோசமாக்கும்.
"காபி, நம் செரிமான அமைப்பில் உள்ள தசைகளைத் தூண்டும் தன்மை கொண்டது. மேலும், எளிதான குடல் இயக்கத்தை ஏற்படுத்தும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால் குறிப்பாக, அதிகப்படியாக காபி குடிப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இது எதிர் விளைவைக் கொடுத்து மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே, உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், காபி குடிப்பதைத் தவிர்க்கவும்" என்று டாக்டர் டிக்ஸா பாவ்சர் கூறுகிறார்.
மலச்சிக்கல் இல்லாவிட்டாலும், தேநீர் அல்லது காபியுடன் ஒரு நாளைத் தொடங்க வேண்டாம் என்று ஆயுர்வேத நிபுணர் அறிவுறுத்துகிறார். அவரைப் பொறுத்தவரை, வெதுவெதுப்பான நீர் அல்லது ஒரு தேக்கரண்டி பசு நெய் மலச்சிக்கலை சரிசெய்து நன்றாக வேலை செய்யும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்