தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pongal Special: நெல்லிக்காய் ஜாமூன், கருப்பு உலர் திராட்சை ஹல்வா, பால்கோவா

Pongal Special: நெல்லிக்காய் ஜாமூன், கருப்பு உலர் திராட்சை ஹல்வா, பால்கோவா

I Jayachandran HT Tamil
Jan 14, 2023 08:25 PM IST

இந்த பொங்கலுக்கு வித்தியாசமாக சர்க்கரைப் பொங்கலுடன் பல விதமான பட்சணங்களையும் செய்து ஜமாய்ங்கள்.

நெல்லிக்காய் ஜாமூன்
நெல்லிக்காய் ஜாமூன்

ட்ரெண்டிங் செய்திகள்

10 நெல்லிக்காய்

1/2 டம்ளர் சர்க்கரை

1 ஸ்பூன் உப்பு

2 ஸ்பூன் மிளகாய் தூள்

1 ஸ்பூன் கடுகு

1 ஸ்பூன் பெருங்காயம்

செய்முறை-

ஸ்டெப் 1

நெல்லிக்காயை நன்றாக கழுவி துடைத்து. எண்ணெயில் கடுகு பெருங்காயம் வதக்கி நெல்லிக்காயும் நன்றாக வதக்கவும்.

ஸ்டெப் 2

வதங்கியதும் உப்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும். தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பின் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்

ஸ்டெப் 3

கொதித்த பிறகு ஜாமூன் ரெடி

 

கருப்பு உலர் திராட்சை ஹல்வா

கருப்பு உலர் திராட்சை ஹல்வா செய்யத் தேவையான பொருட்கள்-

250 கிராம் கருப்பு உலர் திராட்சை

250 கிராம் சர்க்கரை

4 மேஜைக்கரண்டி கார்ன்புலவர் பவுடர்

4 மேஜை கரண்டி தண்ணீர்

8 மேஜை கரண்டி நெய்

செய்முறை-

ஸ்டெப் 1

கருப்பு திராட்சையை தண்ணீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்கும் பின்பு அதை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

ஸ்டெப் 2

ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த உலர் திராட்சையை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வேக வைக்கவும் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்

ஸ்டெப் 3

பின்பு சர்க்கரையை மற்றும் கான்ப்ளரை தண்ணீரில் கரைத்து அல்வாவில் சேர்த்து நன்றாக கலக்கி கெட்டியாகும் வரை நன்றாக வேக விடவும்

ஸ்டெப் 4

பாதாமை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் பின்பு அதை அல்வாவில் நன்றாக கலக்கி பரிமாறவும்.

 

திரிந்த பால் பால்கோவா

திரிந்த பால் பால்கோவா செய்யத் தேவையான பொருட்கள்

திரிந்த பால்

தேவையானசர்க்கரை

செய்முறை

ஸ்டெப் 1

பால் திரிந்து விட்டால் இந்த மாதிரி பால்கோவா செய்து சாப்பிடலாம் சூப்பராக இருக்கும். பால் திரிந்ததும் ஒரு வடி பாத்திரத்தில் தண்ணீரை வடித்து அந்த கெட்டியான பாலை மட்டும் எடுத்து வேறொரு பாத்திரத்தில் சேர்க்கவும்.

ஸ்டெப் 2

இதனை அடுப்பில் வைத்து நன்றாக சுண்ட காய வைக்கவும்.

ஸ்டெப் 3

சுண்டிய பின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொஞ்சம் நேரம் கைவிடாமல் கிளறினால் சூப்பரான பால்கோவா ரெடி.

 

கருப்பு உலர் திராட்சை ஹல்வா
கருப்பு உலர் திராட்சை ஹல்வா

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.