Fat reducing soups: உடல் பருமனைக் குறைக்கும் முத்தான 3 சூப்புகள்
- குறைந்த கலோரிகளைக் கொண்ட ஆரோக்கியமான 3 சூப் வகைகள் செய்முறையைப் பார்க்கலாம்.
- குறைந்த கலோரிகளைக் கொண்ட ஆரோக்கியமான 3 சூப் வகைகள் செய்முறையைப் பார்க்கலாம்.
(2 / 4)
காய்கறி - தக்காளி சூப்- செய்முறை: வெங்காயம், பச்சை மற்றும் மஞ்சள் குடைமிளகாய், காலிஃபிளவர், பிராக்கோலி, முட்டைக்கோஸ் ஆகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 200 கிராம் அளவுக்கு காய்கறிகளுக்கு மூன்று தக்காளியின் சாறை எடுத்து வடிகட்டி பிரஷர் பானில் சேர்க்கவும். 2 பூண்டு பற்களை இடித்துச் சேர்க்கவும். கூடவே செலரிக் கீரையை நறுக்கித் தூவி விடவும். உப்பு, மிளகுத்தூளை தேவையான அளவுக்கு லந்து சுடச்சுட பரிமாறவும். மெதுவாக உறிஞ்சிக் குடித்தால் வாயில் ஊறும் அமைலஸ் சுரப்பி கலந்து எளிதாக ஜீரணமாகும். சூப்பில் நறுக்கிய திருநீற்றுப் பச்சிலையை கடைசியில் சேர்த்து இறக்கினால் சுவை அதிகரிக்கும். வாரம் இருமுறை இரவு உணவுக்குப் பதிலாக இந்த சூப்பை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காது. தேவையில்லாத கொழுப்பும் குறையும்.
(3 / 4)
வெள்ளைப் பூசணி - பாலக் சூப்- செய்முறை: கால் கிலோ வெள்ளைப் பூசணியின் தோலை சீவிவிட்டு விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் ஆப்பிள், 4 இலை பாலக்கீரை, சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும். பூசமி துண்டுகளை பின்னர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதில் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, தேன், சாட் மசாலாத்தூள் சேர்த்து சுடச்சுட இறக்கி சாப்பிடுங்கள். பூசணி போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளைப் பயன்படுத்தியும் இந்த சூப்பைத் தயாரிக்கலாம். வயிறு நிரம்பும். சாறாக அருந்தினால் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். கெட்ட கொழுப்பு தங்காது.
(4 / 4)
சாமை - அரைக்கீரை சூப்- செய்முறை: ஒன்றரை டேபிள் ஸ்பூன் சாமை அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்றாக மணம் வரும்வரை வறுக்கவும். ஆறியதும் கழுவி சிறிய பிரஷர் பானில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 பூண்டுப் பற்களை இடித்துச் சேர்க்கவும். பின்னர் மிகப் பொடியாக நறுக்கிய அரைக்கீரையை சேர்த்து, 3 விசில் வரும்வரை வேக விடவும். அதனுடன் தேவையான உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும். வெவ்வாறு சிறுதானியஙகள், கீரைகள் மட்டுமல்ல, பல்வேறு காய்கறிகள், பட்டாணி, சுண்டல் வகைகளை சேர்த்தும் இதேபோன்று சூப் செய்யலாம். பால் சேர்த்தும் குடிக்கலாம். சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் செரிமாணத்துக்கு மிகவும் ஏற்றது.
மற்ற கேலரிக்கள்