தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Solar Power Will Solar Power Generation Projects Help The Environment

Solar Power : சுற்றுச்சூழலை காக்க சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள் வருமா?

Priyadarshini R HT Tamil
Jan 08, 2024 07:30 AM IST

Solar Power : சுற்றுச்சூழலை காக்க சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள் வருமா?

Solar Power : சுற்றுச்சூழலை காக்க சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள் வருமா?
Solar Power : சுற்றுச்சூழலை காக்க சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள் வருமா?

ட்ரெண்டிங் செய்திகள்

திமுக 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் சூரிய ஒளி அனைத்து மாவட்டங்களிலும் தங்கு தடையின்றி அதிகம் கிடைப்பதால், 2000 மெகாவாட் முதல்கட்டமாக தமிழகத்தில் சூரிய ஒளி மின்உற்பத்தி செய்ய மின்துறை அமைச்சர் திட்டங்களை வெளியிட்டிருந்தார்.

2000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி இலக்கை எட்ட, ஒவ்வொரு மாவட்டத்திலும், 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பூங்காக்கள் அமைக்க அந்தந்த கலெக்டர்கள் 200 ஏக்கர் நிலத்தை கண்டறிந்து ஒதுக்க உத்தரவிடப்பட்டனர்.

முதல் சூரிய மின்உற்பத்தி பூங்கா திருவாரூரில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. திருச்சியில், மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் சூரிய ஒளி மின்உற்பத்தி பூங்கா தொடங்க இடங்கள் பார்க்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டத்தில் கூட அதிகிரிகளால் 100 ஏக்கர் நிலம் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலும் பாடலூருக்கு அருகில் உள்ள காரை பகுதியில் பூங்கா நிலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன என்றாலும் பணிகள் நிறைவடையவில்லை.

சூரிய ஒளி மின்உற்பத்தி செய்யும் பூங்காக்கள் அமைக்க 200 ஏக்கர் நிலம் கண்டறியும் பணியில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை.

இதுகுறித்து தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் பூங்கா அமைக்க நிலம் ஒதுக்குதல் குறித்தான புள்ளிவிவரங்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உள்ளது. ஆனாலும் நிலம் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இந்தப்போக்கு தொடர்ந்தால், தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கும் பணி இனிவரும் காலங்களில் விரைந்து நடக்க வாய்ப்பில்லை.

எனவே, சுற்றுச்சுழலுக்கு அதிகம் கேடு விளைவிக்காத புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாடு தமிழகத்தில் அதிகப்படுத்துவது சிறந்தது என இருந்தும், தமிழக அரசு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அக்கறையின்றி செயல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழக அரசோ, இந்தாண்டு (2024) கோடை மின்தேவையை பூர்த்தி செய்ய புவிவெப்பமடைதலை அதிகரித்து, மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலக்கரி மின்திட்டத்தை ஊக்குவிப்பது சரியா?

ஏன் சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டங்கள் முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை? இந்தோனேசிய நாட்டிலிருந்து தமிழகம் 5 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் அவர்கள் சமீபத்தில் அறிவித்த காலநிலை மாற்ற அறிவியக்கம் இதை கருத்தில்கொண்டு, சூழலுக்கு கேடு விளைவிக்காத சூரிய ஒளி மின்உற்பத்தி பூங்காக்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளுமா? என மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்